ஆதார் அட்டை தொலைந்து விட்டால், புதிய அசல் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் வசதியை யுஐடிஏஐ நிறுவனம் தொடங்கியுள்ளது. ரூ.50 கட்டணம் செலுத்தி இந்த புதிய அட்டையை பெற்றுக்கொள்ளலாம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 19, 2019

ஆதார் அட்டை தொலைந்து விட்டால், புதிய அசல் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் வசதியை யுஐடிஏஐ நிறுவனம் தொடங்கியுள்ளது. ரூ.50 கட்டணம் செலுத்தி இந்த புதிய அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

ஆதார் அட்டை தொலைந்து விட்டால், புதிய அசல் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் வசதியை யுஐடிஏஐ நிறுவனம் தொடங்கியுள்ளது. ரூ.50 கட்டணம் செலுத்தி இந்த புதிய அட்டையை பெற்றுக்கொள்ளலாம். 
ஆதார் அட்டை தொலைந்து விட்டால், புதிய அசல் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் வசதியை யுஐடிஏஐ நிறுவனம் தொடங்கியுள்ளது. ரூ.50 கட்டணம் செலுத்தி இந்த புதிய அட்டையை பெற்றுக்கொள்ளலாம். 
மத்திய, மாநில அரசுகள் வழங் கும் சமூகநல திட்டங்களை உண்மை யான பயனாளிகளிடம் சேர்ப்பதற் காக, கடந்த 2010-ம் ஆண்டுமுதல்,பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. அதற் கான ஆதார் பதிவு மற்றும் ஆதார் அட்டை வழங்கும் பணிகளை இந் திய தனி அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) மேற்கொண்டு வரு கிறது.தமிழகத்தில் இதுவரை 5 வயதுக்கு மேற்பட்ட 7 கோடியே 64 லட்சம் பேரில் 7 கோடியே 16 லட்சம் பேருக்கு (93.6 சதவீதம்) ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 வயதுக்கு உட்பட்ட 55 லட்சத்து 96 ஆயிரம் குழந்தைகளில், 29 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 
1,500 அஞ்சலகங்கள் 
தமிழகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள் ளும் வசதி, 308 அரசுஇ-சேவை மையங்கள், 1,400 வங்கிக் கிளை கள், 1,500 அஞ்சலகங்கள் ஆகிய வற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும் பிஎஸ்என்எல் சேவை மையங்களிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற் கொள்ளும் வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன. சமூகநலத் துறையின் குழந்தைகள் நல மையங்கள் மூலமாக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கான ஆதார் பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் அழுக்காகியும், சேதமடைந்தும் உள்ளன. பலர் அட்டையை தொலைத்தும் விடு கின்றனர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஆதார் பதிவு மையங்களில் ஏடிஎம் அட்டை வடிவில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை தொடங்கப் பட்டது.அதில் பெறப்படும் அட்டையில் உள்ள கியூஆர் கோடுகளை, குடும்ப அட்டை பதிவு இயந் திரங்கள்உள்ளிட்டவற்றால் படிக்க முடியவில்லை. அதனால் அந்த அட்டையை முழுமையாக பயன் படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், பிளாஸ்டிக் அட்டை வடிவில் ஆதார் அட்டை வழங்கும் சேவை நிறுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து தற்போது யுஐடிஏஐ நிறுவனமே, ஏற்கெனவே வழங்கிய நீளமான அசல் ஆதார் அட்டையை வழங்கும் சேவையை சோதனை திட்டமாக தொடங்கியுள்ளது. 
இது தொடர்பாக யுஐடிஏஐ அதிகாரிகள் கூறியதாவது: 
இணையதள வசதி 
புதிய அசல் ஆதார் அட்டை வேண்டுவோர், www.uidai.gov.in என்ற இணையதளத்தில் Order Aadhaar Reprint (Pilot Basis) என்ற பகுதியை சொடுக்கி, புதிய அட்டைக்கு பதிவு செய்யும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு ரூ.50 கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். அதன் பின்னர் விரைவு அஞ்சலில் ஆதார் அட்டை வீட்டுக்கே வந்து சேரும். இது மாதிரி திட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறைகள் ஏதேனும் இருப்பின், பின்னாட்களில் சரி செய்யப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment