(ஜனவரி 24ஆம் தேதி) கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்படும் என கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில்,கேபிள் டிவியில் அனலாக் முறை ஒழிக்கப்பட்டு டிஜிட்டல் ஒளிபரப்பு இந்தியா முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தனது 8ஆவது கட்டண (டேரிப்) ஆணையை புதிய கட்டணக் கொள்கையாக அறிவித்துள்ளது.
அதன்படி மக்கள் விரும்பும் சானல்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என்ற அடிப்படையில் கட்டண சானல்கள் தங்கள் கட்டண விகிதத்தை தனித்தனியாகவும் சானல்களை இணைத்து பொக்கே முறையிலும் அதிகபட்ச சில்லறை விலை என்ற முறையில் அறிவித்துள்ளன.
இந்த முறை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளன. அதற்கான ஜிஎஸ்டி 18 விழுக்காடாகும். இந்த கட்டண கொள்கையில் வரவேற்கத்தக்க சில விஷயங்கள் இருந்தாலும்கூட, இந்த திட்டத்தால் பழைய முறை முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு அது முழுமையாக கட்டண சானல் ஒளிபரப்பாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
தற்போதைய நிலையில் கட்டண சானல் நிறுவனங்களும் எம்.எஸ்.ஓ. எனப்படும் கட்டுப்பாட்டறை நிறுவனங்களும் பேசி இசைந்து ஒரு கட்டணத்தை இறுதி செய்து வழங்கி வந்தனர். தமிழகத்தின் முன்னணி கட்டுப்பாட்டறை அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன், தமிழக கேபிள் டிவி கம்யூனிகேசன் லிட்., விகே டிஜிட்டல், சுமங்கலி கேபிள்விஷன், கேபிள் காஸ்ட், ஜாக், ஏஎம்என் மற்றும் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்டண சானல்களை அதிகபட்சம் 200 ரூபாய்க்கு கேபிள் ஆப்ரேட்டர்கள் வழியாக வழங்கி வருகிறது. புதிய கட்டணக் கொள்கை அறிவித்த நிலையில் இதே சானல்களை மக்கள் தேர்வு செய்யமுயன்றால் 600 ரூபாய்க்கும் மேலாக கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
தமிழகத்தில் 1.5 கோடி கேபிள் இணைப்புகள் இருப்பதாக கருதும் நிலையில் ஸ்டார் குழும சானல்களை ஒளிபரப்பஅரசு கேபிள் டிவி நிறுவனம், டிசிசிஎஸ், சுமங்கலி, வி.கே.டிஜிட்டல் உள்ளிட்ட இதர நிறுவனங்கள் இணைந்து மொத்த மாக 2 கோடி ரூபாய் மாதம் வழங்கி வந்ததாகதெரிகிறது. அதே நிறுவனத்திற்கு தற்போதையவிதிமுறை காரணமாக சுமார் 95 கோடி ரூபாயை வழங்க வேண்டும்.
அதேபோல் சன்குழும சானல்களுக்கு தற்போது அரசு கேபிள்,டிசிசிஎல், வி.கே.டிஜிட்டல், சுமங்கலி மற்றும்இதர நிறுவனங்கள் இணைந்து சுமார் 9 கோடி வழங்கி வந்தது. ஆனால் இந்த திட்டத்தின்படிதோராயமாக 70 கோடி ரூபாய் வழங்க வேண்டி வரும்.
மேலும் பிரதான சோனி இந்தியா, காஸ்ட் போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் வழங்க வேண்டி வரும். தற்போது பொதுமக்கள் 300 ரூபாய்க்கு பார்க்கும் சானல்களை 600 ரூபாய் கொடுத்து பார்க்கும் நிலையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக டிராய் அறிவித்துள்ளதாக கூட்டமைப்பு கருதுகிறது.
மேலும் மாதம் தோறும் கட்டணம் செலுத்தும் பொதுமக்களின் சந்தா தொகைக்கு 18 விழுக்காடு ஜி.எஸ்.டி. என்பது வருந்தத்தக்கது. கேபிள் டிவி சேவையுடன் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இணைய சேவையை ரயில்வே மற்றும் பிஎஸ்என்எல் உடன் இணைந்து வழங்க உள்ளதால் அது அத்தியாவசிய சேவையாகிறது.
எனவே ஜி.எஸ்.டி. வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். கடந்த 35 ஆண்டுகாலமாக இந்த தொழிலை குறிப்பிட்ட பகுதியில் செய்து வாழ்ந்து வரும் அடிமட்ட கேபிள் ஆப்பரேட்டர்களின் வாழ்வாதாரம் சீர்குலை யா வண்ணம் ஆப்ரேட்டர்கள் பகுதி வாரியாக அங்கீகரிக்கப்படும் வகையில் போட்டியின்றி தொழில் புரியும் வண்ணம் சட்ட பாதுகாப்பு செய்து தர வேண்டும்.
அவசரக் கோலத்தில் இதனை நிறைவேற்றாமல் அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி நிறைவேற்ற டிராய் முன்வர வேண்டும். அதுவரை மத்திய அரசு இந்த திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் ஆதரவோடு கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலுங்கானா ஆகிய தென் தமிழகம் தழுவிய அளவில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 24ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிபரப்பு நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கா விட்டால் பொதுமக்கள், தொழிற்சங்கங்கள் இணைந்து வரும் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.
No comments:
Post a Comment