தமிழகத்தில் 1248 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை: நூலகமாக மாற்றப்படும் அமைச்சர் செங்கோட்டையன் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 17, 2019

தமிழகத்தில் 1248 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை: நூலகமாக மாற்றப்படும் அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 1248 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை: நூலகமாக மாற்றப்படும் அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: தமிழகத்தில் 1248 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்று தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் புதனன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது:
தற்போது தமிழகத்தில் 1248 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிப்பது இல்லை. ஆனால் அதற்காக அந்தப் பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை.அவற்றை நூலகங்களாக மாற்றும் முயற்சியில் இருக்கிறோம். அங்குள்ள ஆசிரியர்களே நூலகர்களாகச் செயல்படுவார்கள். அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்திருந்தார் ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் படிப்படியாக அந்தப் பள்ளிகளை மூடும் முயற்சிகள் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment