தேர்வுத்துறை ஆலோசகராக வசுந்தரா தேவி நியமனம்!
தமிழக பள்ளிக்கல்வித் தேர்வுகள் துறை ஆலோசகராக முன்னாள்இயக்குநர் வசுந்தரா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித் தேர்வுகள் துறையின் இயக்குநராக இருந்த வசுந்தரா தேவியின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி அவர் கடந்த வாரம் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், அவர் ஓய்வு பெற்று ஒரு வாரமே ஆனநிலையில் வசுந்தரா தேவி, தமிழக பள்ளிக் கல்வித் தேர்வுத்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித் தேர்வுகள் துறையில் அவர் மிகச்சிறந்த அனுபவம் பெற்றுள்ளதால், அதனை உபயோகித்துக் கொள்ளும் பொருட்டு மீண்டும் அவருக்கு தேர்வுகள் துறையில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது
No comments:
Post a Comment