கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைகளுக்கிணங்க , கடலூர் மாவட்டத்தில் 2021 அக்டோபர் -2 ந் தேதி தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்த பட்சம் 5 மரக்கன்றுகளை நடுதல் வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே அனைத்து வகைப் பள்ளிகளிலும் அக்டோபர் -2 ஆம் தேதி மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்பாடு செய்து அக்டோபர் 2 ஆம் தேதி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ்விழாவில் கலந்து கொள்ளுமாறும் அதன் விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டுமென்றும் அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment