ஆட்டோ டெபிட்டில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!
ஒவ்வொரு மாதமும் டிஷ் டிவி, மொபைல், மின்சாரம், காஸ், குடிநீர் வரி உள்ளிட்ட மாதாந்திர கட்டணங்களை செலுத்த தங்களின் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் ஆட்டோ டெபிட் வசதியை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இதனால், சில நேரங்களில் அவசர தேவைக்கு என ஒதுக்கி இருந்த பணத்தை கூட எடுக்க முடியாமல், ஆட்டோ டெபிட் மூலம் பணம் எடுக்கப்பட்டு விடும். இந்த சூழலில், வங்கிகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு நிறுவனங்களுக்கு ஆட்டோ டெபிட் முறையில் இனி வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் பணம் எடுக்க கூடாது என்ற புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது.
அதன்படி, பணத்தை எடுப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக, வாடிக்கையாளர்களுக்கு செல்போன் அல்லது இ-மெயில் மூலமாக அறிவிப்பு அனுப்ப வேண்டும். அதற்கு வாடிக்கையாளர் அனுமதி வழங்கினால் மட்டுமே, அந்த பரிவர்த்தனையை வங்கிகள் செயல்படுத்த முடியும்.
இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு வங்கிகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு நிறுவனங்கள் அவகாசம் கோரியிருந்தன. இந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதன் மூலம், வாடிக்கையாளரின் அனுமதியின்றி வங்கிகள் இனிமேல் ஆட்டோ டெபிட் செய்ய முடியாது.
No comments:
Post a Comment