வனத்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே || மாத ஊதியம்: ரூ.80,000/- - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 19, 2023

வனத்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே || மாத ஊதியம்: ரூ.80,000/-

வனத்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே || மாத ஊதியம்: ரூ.80,000/- 
 
Ministry of Environment, Forests and Climate Change ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. 
 
இதில் காலியாக உள்ள Young Professional, Consultant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
    தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம். 
 
 MOEF காலிப்பணியிடங்கள்: 
 
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Young Professional, Consultant பணிக்கென காலியாக உள்ள 13 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Consultant தகுதி: 
 
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree / Master Degree/ Ph.D தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 
 
MOEF வயது வரம்பு: 
 
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
Consultant ஊதிய விவரம்: 
 
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.80,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
MOEF தேர்வு செய்யப்படும் முறை: 
 
 தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 மற்றும் 21 நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
 
இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

No comments:

Post a Comment