பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளி வைக்கப்பட்டதை ஈடு கட்டும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்பு போல் நடத்தப்படும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 10, 2023

பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளி வைக்கப்பட்டதை ஈடு கட்டும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்பு போல் நடத்தப்படும்

தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பள்ளிகளின் திறப்பை தள்ளி வைத்தது அதன்படி ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் என்றும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
            இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் அவர்கள் கோடை காரணமாக கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளி வைக்கப்பட்டதை ஈடு கட்டும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்பு போல் நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார் வரும் கல்வியாண்டில் பாடங்களை விரைவாக முடிக்க சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 
 
                செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பள்ளிகளை திறக்க தாமதம் ஏற்படுவதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும். தேசிய அளவிலான போட்டியில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும். 
 
            போட்டி குறித்த முறையான தகவல் வரவில்லை; 9க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பங்கேற்கவில்லை என்று அமைச்சர் அன்பில் தெரிவித்தார். ஆகவே எத்தனை சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

No comments:

Post a Comment