விரைவில் அரசு ஊழியர்களுக்கு வரும் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு & 18 மாத நிலுவை தொகையும் அறிவிக்கப்படலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 12, 2023

விரைவில் அரசு ஊழியர்களுக்கு வரும் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு & 18 மாத நிலுவை தொகையும் அறிவிக்கப்படலாம்

அரசு ஊழியர்களுக்கு வருகிறது குட்நியூஸ்.. சம்பளத்தை விடுங்க.. இதுவும் வரப்போகுதாம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்பட்டு வருகிறது.. 
     
            இந்நிலையில், இன்னொரு மகிழ்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.. அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடத்துக்கு இரண்டு முறை இந்த அரசு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும்.. 
 
        இந்த ஆண்டிற்கான அகவிலைப்படி உயர்வு ஏற்கனவே ஒரு முறை அறிவித்துள்ள நிலையில், இப்போது ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு மீண்டும் ஒருமுறை வெளியாக உள்ளது.. 
 
  ஜூலை மாதம்: 
 
        இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜூலை மாதம் விரைவில் தொடங்க இருப்பதால் மறுபடியும், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட இருக்கிறது. இந்த அகவிலைப்படி உயர்வு, விலைவாசி ஏற்றத்தை குறிக்கும் பணவீக்க விகிதத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களாகவே பணவீக்கம் குறைந்து கொண்டு வருகிறது. 
 
            எனவே, ஜூலை மாதம் ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உயர்த்தப்பட்டால், அகவிலைப்படியானது 45 சதவீதமாக உயரும் என்று தெரிகிறது.. 
 
            அதனால் ஊழியர்களுக்கு சம்பளமும், ஓய்வூதியமும் உயரக்கூடும்.. உயர்வு எவ்வளவு: அதாவது, இந்த மாதத்தில் மட்டுமே ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கை 0.72 சதவீதம் அதிகரித்துள்ளதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாயமாக 3 முதல் 4 சதவீதம் வரைக்கும் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
            அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால் மொத்த அகவிலைப்படி உயர்வு 46 சதவீதமாக அதிகரிக்கும். இந்த அகவிலைப்படி உயர்வினால் கிட்டத்தட்ட 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 69.76 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறலாம் என்று கூறப்பட்டது. 
 
        அதுமட்டுமல்ல, அகவிலைப்படி 4% உயர்வு வழங்கினால் ஊழியரின் மாதாந்திர சம்பளம் ரூ.42,000 மற்றும் அடிப்படை ஊதியம் ரூ.25,500 ஆக இருப்பின் மாத சம்பளம் ரூ.10,710 ஆக உயரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே போல ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 அடிப்படை ஓய்வூதியம் வழங்கப்பட்டால் அகவிலைப்படி உயர்வின்படி ரூ.12,600 ஆக உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 
 
             அகவிலைப்படி: ஆனால், இப்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏஐசிபிஐ தரவுகளின்படி தான் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது... அந்தவகையில், அகில இந்திய நுகர்வோர் விலை குறுகியீட்டில் புள்ளி விவரங்கள் அனைத்தும் மாதத்தின் கடைசி நாள் அன்றுதான் வெளியிடப்படுகின்றது. தொழிலாளர் அமைச்சகத்தால் இவை வெளியிடப்படுகின்றன. 
 
            88 மையங்களுக்கும் மற்றும் நாடு முழுவதற்குமான கணக்கீட்டு விவரங்கள் இதுவாகும்.. இந்நிலையில், 2023 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான அகவிலைப்படி உயர்வு விரைவில் வெளியாக உள்ள நிலையில், 18 மாத நிலுவை தொகையும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
            இந்த DA உயர்வானது 4% அறிவிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி உயர்வானது, 46 % ஆக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 
 
 
            அறிவிப்பு: முன்னதாக, 2020 ஜனவரி முதல் ஜுன் 2021 வரை மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது செயல்படுத்தப்படவில்லை.. அது நிலுவையிலும் வைக்கப்பட்டிருந்தது.. பொருளாதார மந்தம் நிலவுவதால், நிலைமை சரியில்லை என்றும், அவை சீரானதும், அகவிலைப்படி அளிக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment