4th & 5th எண்ணும் எழுத்தும் - பாடப்பகுதியில் ஆசிரியர்களிடையே எழக்கூடிய கேள்விக்கான பதில்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 10, 2023

4th & 5th எண்ணும் எழுத்தும் - பாடப்பகுதியில் ஆசிரியர்களிடையே எழக்கூடிய கேள்விக்கான பதில்கள்

 எண்ணும் எழுத்தும் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு  கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பகுதியில் ஆசிரியர்களிடையே எழக்கூடிய கேள்விக்கான பதில்கள் 
 
 1.கேள்வி : What about remedial teaching in EE 4&5 ?

 பதில் : நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களிலும் 3.40 மணி முதல் 4.10 மணி வரை உள்ள நான்காவது பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு குறைதீர் கற்பித்தலை மேற்கொள்ளலாம்.

 2.கேள்வி: 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு வேறு எந்த பதிவேடும் பராமரிக்க வேண்டுமா?

 பதில்: நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு பாடக்குறிப்பு படிவம் மட்டும் எழுதினால் போதுமானது.

 3.கேள்வி: subject note எழுத வைக்க வேண்டுமா.  work book எழுத வைக்கும்பொழுது ?

 பதில்: கணக்கு பாடநூலில் உள்ள பயிற்சிகளை கணக்கு பாடக்குறிப்பேட்டில் (Maths Notebook) தான் எழுத வைக்க வேண்டும்.

 பயிற்சி நூலில் உள்ள கணக்குகளை மட்டுமே பயிற்சி நூலில் எழுத வேண்டும்...


04.கேள்வி:  அறிவியல் பயிற்சி நூல் ' என் பக்கம் ' செயல்பாடு என்ன?

 பதில்: Open ended place for students, what they learn from that lesson. It is creativity place for kids.  They can drawing, creative mind map.
This place is useful to teacher for better understanding of students  level in particular LO.


 05.கேள்வி: மாவட்ட அளவில் பார்வைக்கு வைக்கப்பட்ட துணைக் கருவிகள் (கணக்கு மற்றும் அறிவியல்) தனித்தனி படங்கள் எவையெவை?

 பதில்: ஆசிரியர் கையேட்டில் பின்னிணைப்பில் கொடுத்துள்ள படங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்..

 06.கேள்வி:  4 ம் வகுப்பில் உள்ள மீத்திற மாணவர் ஐந்தாம் வகுப்பு பயிற்சி செய்ய அனுமதிக்கலாமா?

 பதில் : நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு தனி பயிற்சி கையேடு. அதில் ஐந்தாம் வகுப்பிற்குரிய எந்த பயிற்சியும் இருக்காது. நான்காம் வகுப்பு மாணவர்களை அவர்களுக்குரிய  பயிற்சி நூலில் உள்ள பயிற்சிகளையும் பாடநூலில் உயர்ந்த பயிற்சிகளையும் செய்ய வைத்தால் போதுமானது.

 07.கேள்வி: தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் இரு ஆசிரியர்கள்( உ.ஆ,த.ஆ) பாடத்தை மையப்படுத்தி வகுப்புகளை பிரித்துக் கொள்ளலாமா...அதாவது மொழிப்பாடம் 1_5 வகுப்பு வரை தலைமை ஆசிரியரும்.பிற 3 பாடங்களை உதவி ஆசிரியரும் என பிரித்துக் கொள்ளலாமா ?

 பதில் : இரண்டு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் மூன்று வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஓர் ஆசிரியரும் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஓர் ஆசிரியரும் வகுப்பினை மேற்கொள்ள வேண்டும்.

08.கேள்வி:  நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு தனி பயிற்சி கையேடு. அதில் ஐந்தாம் வகுப்பிற்குரிய எந்த பயிற்சியும் இருக்காது. நான்காம் வகுப்பு மாணவர்களை அவர்கள் கூறிய பயிற்சி நூலில் உள்ள பயிற்சிகளையும் பாடநூலில் உயர்ந்த பயிற்சிகளையும் செய்ய வைத்தால் போதுமானது.
 பதில்:மாணவர்களுக்கு ' என் பக்கம்'செயல்பாடு கொடுத்து அழகாக செய்ய வைக்கலாம்..  மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு ஊக்குவிக்க (Support)  செய்ய வைக்கலாம்..

09.கேள்வி: 3 ஆசிரியர்கள் உள்ள பள்ளியில் 1,2 வகுப்பு ஒரு ஆசிரியர் .
3 ஆம் வகுப்பு ஒரு ஆசிரியர் .
4,5 வகுப்பு ஒரு ஆசிரியர். என்ற நிலையில் மூன்றாம் வகுப்பில் குறைந்த அளவு மாணவர்கள் இருப்பின் 4 , 5 வகுப்பில் ஏதேனும் ஒரு சில பாடங்களை மூன்றாம் வகுப்பு ஆசிரியருக்கு பிரித்து  கொடுக்கலாமா.?

 பதில்: வகுப்பு விஷயத்தில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்று ஏற்கனவே திட்டவட்டமாக இயக்குநர் அவர்களின்  செயல்முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

👉வகுப்புகளை நாம் நமக்கேற்றாற்போல எப்படி வேண்டுமானாலும் பிரித்துக்கொள்ளலாம். ஒரே ஒரு கட்டாயம் மட்டுமே
1,2,3 வகுப்புகளை
 4,5 வகுப்புக்களோடு சேர்க்கக்கூடாது...


Little scientist corner என்ற பெயர் பயன்படுத்தக்கூடாது ...

 அறிவியல் களஞ்சியம் என்று மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

10.கேள்வி: அறிவியல் கட்டகத்தில் வளரறி மதிப்பீடு (ஆ) வெள்ளிக்கிழமையன்று நடைபெற வேண்டும் என print ஆகி உள்ளது.

அனைத்துப் பாடங்களுக்கும் { 4 & 5 வகுப்புகளுக்கு} புதன்கிழமை தான் என்று உறுதி செய்து கொள்ளலாமா ?

 பதில் : புதன்கிழமை மட்டுமே வளரறி மதிப்பீடு (ஆ) நடைபெறும்..

11.கேள்வி: எண்ணும் எழுத்தும் களம் - களஞ்சியம் வேறுபாடு ?

 பதில்: களம் என்பது 1 முதல் 3 வகுப்புகளுக்கு உரியது.
 
 ஒவ்வொரு களத்திலும் அந்த களம் சார்ந்த அனைத்து பாடங்களின் துணைக்கருவிகளும் இடம்பெறும். உதாரணமாக, செயல்பாட்டுக் களத்தில் தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்று பாடங்கள் சார்ந்த செயல்பாடுகளுக்குரிய துணைக்கருவிகள் (ஆசிரியர் தயாரித்தது, மாணவர்கள் படைப்பு) வைக்கப்படும்.

களஞ்சியம் என்பது நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு உரியது ..

இங்கு பாடத்திற்கு ஒரு களஞ்சியம். ஒரு களஞ்சியத்தில் அந்த பாடத்திற்கான துணைக்கருவிகள் (ஆசிரியர் தயாரித்தது, மாணவர்கள் படைப்பு) வைக்கப்படும்.

12.கேள்வி:  புதன்கிழமை அன்று FA (b)  மேற்கொள்ளும் பொழுது பாடக்குறிப்பேட்டில் அன்றைய தினம் மதிப்பீடு என்பது இடம் பெறுமா அல்லது பாடத்திற்குரிய செயல்பாடுகள் இடம் பெறுமா. ஏனெனில் 1-3 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பில் வெள்ளிக்கிழமை அன்று மதிப்பீடு என்பது மட்டுமே இடம்பெற்றிருக்கும்.

 பதில்: ஒவ்வொரு கட்டகத்திற்கும் FA(b) தொடங்கும் தேதி முறையாக அறிவிக்கப்படும்.

அந்த புதன்கிழமைகளில் மட்டும் மதிப்பீடு என்று எழுதலாம்.

மதிப்பீடு இல்லாத புதன்கிழமைகள் இருந்தால் அன்றைய தினம் கற்பித்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளலாம்..

13.கேள்வி: ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி நூலில் நான்காம்  வகுப்புக்குரிய திறனை உள்ளடக்கி இருக்குமா?

 பதில் :  உள்ளடக்கி இருக்கும்...

 14.கேள்வி : நான்கு களஞ்சியங்களிலும் முதல் பருவத்திற்குரிய கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகளை தயார் செய்து முன்கூட்டியே display செய்து விட வேண்டுமா அல்லது அந்த வாரத்திற்குரிய பாடப் பகுதியில் உள்ள துணைக் கருவிகள் display செய்தால் போதுமானதா .அந்த வாரத்திற்குரிய பாடப் பகுதி முடிந்தவுடன் அவற்றை அந்தப் பகுதியில் இருந்து எடுத்து விடலாமா. அல்லது அந்த களஞ்சியங்களில் தொடர்ந்து  இடம்பெறலாமா ?

 பதில் : அந்தந்த வாரங்களுக்கு உண்டான துணைக்கருவிகளை  வைத்தால் போதுமானது...

15.கேள்வி : பருவ இறுதியில் summative assessment paper -ல் அனைத்து மாணவர்களும் எழுத வேண்டுமா... அல்லது விருப்பப்படும் மாணவர்கள் மட்டும் எழுதினால் போதுமா ?

 பதில் : தொகுத்தறி மதிப்பீடு பயிற்சி நூலில் பயிற்சி செய்ய வேண்டும். பிறகு செயலியில் மேற்கொள்ள வேண்டும். இந்த மதிப்பெண் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்

செயலி வழி வினாத்தாளை அச்செடுத்து தேர்வு எழுத வைப்பது ஆசிரியரின் சுய விருப்பம். இந்த மதிப்பெண் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

 16.கேள்வி : ஒவ்வொரு மாத இறுதியிலும்  நடத்தப்படும் தேர்வுக்கு பதிவேடு பராமரிக்க வேண்டுமா?

 பதில் : வேண்டாம்...

17.கேள்வி : FA(b) மதிப்பீடு வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும்.

ஒவ்வொரு மாத இறுதியிலும் தேர்வு

தொகுத்தறி மதிப்பீடு

FA(a) மதிப்பீடு

இவையில்லாமல் வேறு ஏதேனும் மதிப்பீடு உள்ளதா ?

 பதில் : இல்லை ..

 18.கேள்வி தினந்தோறும் அனைத்து களஞ்சியங்களும் இடம்பெற வேண்டுமா அல்லது அந்த நாளுக்குரிய  பாடத்திற்குரிய களஞ்சியங்கள் மட்டும் இருந்தால் போதுமா

 உதாரணமாக, திங்கட்கிழமை மூன்று பாடங்கள் மட்டுமே உள்ளது முதல் பாடவேளை தமிழ்
 இரண்டாவது பாடவேளை கணக்கு
 மூன்றாவது பாட வேளை ஆங்கிலம்

இவை மட்டும் அந்த நாள் இடம் பெற்றால் போதுமா?

 பதில் : அந்தந்த வாரங்களுக்கு உண்டான துணைக்கருவிகளை  வைத்தால் போதுமானது...

19.கேள்வி :  மூன்றாம் வகுப்பில் மொட்டு நிலையை மட்டும் முடித்துவிட்டு நான்காம் வகுப்பிற்கு வரும் பொழுது அந்த மாணவர்களுக்கான நான்காம் வகுப்பு பயிற்சி புத்தகத்தில் எப்படி கையாள்வது அதேபோல நான்காம் வகுப்பு முடித்துவிட்டு ஐந்தாம் வகுப்பு வரும் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகத்தில் அனைத்து நிலை அரும்பு மொட்டு மலர் நான்காம் வகுப்பு என அனைத்து பயிற்சிகளையும் செய்விக்க வேண்டுமா?

 பதில் : மூன்றாம் வகுப்பில் மொட்டு நிலையை மட்டும் முடித்துவிட்டு நான்காம் வகுப்பிற்கு வரும் பொழுது அந்த மாணவர்களுக்கு நான்காம் வகுப்பு பயிற்சி புத்தகத்தில் அரும்பு மொட்டு மலர் நிலை செய்ய வைத்து நான்காம் வகுப்பிற்கு செல்லாம். Use Remedial teaching time 3 40 to 4.10...

 அதேபோல நான்காம் வகுப்பு முடித்துவிட்டு ஐந்தாம் வகுப்பு வரும் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகத்தில் நேரடியாக   பயிற்சி செய்ய வைக்கலாம். நிலைக்கேற்றவாரு இல்லை எனில் குறைதீர் கற்றல் நேரத்தை பயன்படுத்தலாம்.

20.கேள்வி : நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு வரும் குழந்தைகளைப் பொறுத்தமட்டில் முதல் வாரத்தில் கொடுக்கப்படும் நாங்கள் கற்றவை பாடப்பகுதி மூலம் அந்தந்த குழந்தைகளின் நிலையை ஆசிரியரால் அறிய இயலும்.. குறிப்பிட்ட ஒரு நிலை குழந்தை அவரது நிலைக்குரிய பயிற்சியினை செய்தால் போதுமானது.
 
பதில் : அப்படியானால் அந்தந்த வகுப்பிற்குரிய அனைத்து பயிற்சிகளையும் முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா முடியுமானால் குறைதீர் பயிற்சியைக் கொண்டு அவரவர் வகுப்பிற்குரிய பயிற்சியை முடிக்கலாம் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா...

பதில்: ஒரு குழந்தை மலர் நிலையில் இருந்து நான்காம் வகுப்பிற்கு வந்திருந்தால் அக்குழந்தை நேரடியாக நான்காம் வகுப்பு பயிற்சி செய்யலாம்...

 21.கேள்வி :  4 & 5 அறிவியல் பயிற்சி புத்தகங்களில் நிலைக்கேற்ற பயிற்சிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளதா?

 பதில் : கணிதத்தில் நிலைக்கேற்ப பயிற்சிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. அறிவியலைப் பொறுத்த வரையில் இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் ஒவ்வொரு பயிற்சியிலும் வினாக்கள் அமைப்பு முறை நிலைக்கேற்ப அமைக்கப்பட்டு இருக்கும்.

22.கேள்வி :  4 /5 ஆம் வகுப்பு நிலை மாணவர்கள் அனைத்து பயிற்சிகளையும் செய்ய வேண்டுமா?

 பதில் : இல்லை ... அவரவருக்குரிய பயிற்சியை செய்தால் போதுமானது.

 23.கேள்வி : இந்த வருடம் ஆரம்பத்திலும் base line assessment இருக்குமா?

 பதில் : இருக்காது....

 24.கேள்வி : SALM முறையும் தொடருமா? மனவரைபடம் மற்றும் பாடவாரியாக வைக்கப்பட்ட அடைவுப்பெட்டி போன்ற செயல்பாடுகளும் உண்டா? என தெளிவுபடுத்தவும்...

 பதில் : எண்ணும் எழுத்தும் பயிற்சிகள் என்ன சொல்லப்பட்டனவோ அதன்படியே வகுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாடக்குறிப்பு படிவம் எழுதிட வேண்டும். கால அட்டவணையில் கொடுத்துள்ளபடி வகுப்பறையில் பாடங்களை கையாள வேண்டும்.

 25.கேள்வி : மனவரைபடம் வரையச் சொல்ல வேண்டுமா?

 பதில் : வேண்டாம்...

SALM முறை முடிந்தது...
இந்த கல்வியாண்டு முதல் எண்ணும் எழுத்தும் வகுப்பறை..

 26.கேள்வி : CCE மதிப்பீட்டின் படி
FA (a )வளரறி (அ) என்பது (வாரத்தேர்வு) ஒரு பாடப்பகுதியின் அலகுத்தேர்வு அல்லது வாய்மொழி தேர்வாகும்.
FA( b) வளரறி தேர்வு என்பது ஒரு மாதத்தின் இறுதியில் (மாதத்தேர்வு) பாடப்பகுதியின் அலகுத்தேர்வு இது எழுத்துத்தேர்வாகும்.

SA தொகுத்தறி தேர்வு என்பது பருவத்தேர்வாகும்.
தற்போது நமது EE 4 & 5 வகுப்பிற்கு புதன்கிழமை நடைபெறும் தேர்வு FA (a )வா அல்லது FA (b) யா என்பதன் தெளிவான விளக்கம் ?

 பதில் : புதன் கிழமை நடை பெறுவது FA( b).

FA (a) மதிப்பீட்டிற்கான செயல்பாடுகள் பற்றிய விவரங்கள் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது..

 FA(a) மதிப்பெண்களை மட்டும் செயலில் பதிவிட்டால் போதுமானது.

 27.கேள்வி : மனவரைபடத்தில் விடுபட்ட தகவல்களை எழுதுவேன்  கொடுக்கப்பட்டுள்ளது
 (பக்கம் 37 ல்)

 பதில்: SALM முறையில் கருத்து வரைபடம் வரைவோம். அது தற்போது இல்லை.

மன வரைபடம் என்பது  மாணவர்கள் பாடக்கருத்தை சுருக்கி வரைவது. அது படைப்பாற்றல் கல்வி முறையில் (6 முதல் 8 வகுப்புகள்) உள்ளது.

தமிழ், ஆங்கிலம், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களில் மனவரைபடம் இல்லை..

 அறிவியலிலும் ஐந்தாம் வகுப்பில் ஒரே ஒரு வினா. மாணவர்கள் நிரப்புவது போல உள்ளதே தவிர இது SALM முறையில் உள்ள 5 பெட்டிகள் போல் இல்லை ...

பயிற்சி புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை மட்டும் செய்தால் போதும்.... மேற்கொண்டு நீங்களாக எந்த ஒரு மனவரைபடமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை....

28.கேள்வி : FA(a) எப்போது மேற்கொள்ள வேண்டும் செயலி வழியாக ?

 பதில் : ஒவ்வொரு மாதமும் இது பற்றி முன்கூட்டியே அறிவிக்கப்படும்.

 29.கேள்வி: இந்த "ஆயத்த செயல்பாடு என்பது ஆஹா அறிவியல் தானா ? எனபதை விளக்கவும்.

 பதில்: ஆஹா அறிவியலுக்கு பதில் இடம்பெற்றுள்ளது ஆயத்த செயல்பாடு...
இப்பாடப்பகுதிக்கு ஆஹா அறிவியல் ஏற்கனவே இடம் பெற்றுள்ளதால் தொடர்ந்து வரும் நாட்களில் ஆயத்த செயல்பாடு இடம்பெற்றுள்ளது.. இரண்டு நாட்களுக்கு மட்டும் ஆயத்த செயல்பாடு ஆனது இடம்பெறும்...

இந்த குறிப்பிட்ட நாட்களில் ஆயத்த செயல்பாட்டுடன்  வகுப்பினை தொடங்கினால் போதுமானது...

30.கேள்வி:  " பயணம் செய்வோம் " என்பதில் வரும் பாடநூல் பயிற்சிகளுக்காக போகும்போது அந்தப் பயிற்சி இடம்பெறும் அலகினில் காணும் கருத்துகளையும்(புத்தகம்) மாணவர்களுக்கும் தனியே கற்பிக்க வேண்டுமா?

 பதில் : வேண்டாம் .. பாடநூலில் உள்ள பயிற்சி மட்டும் செய்தால் போதும்.

 ஆசிரியர் கையேட்டில் உள்ள செயல்பாட்டை மட்டுமே கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

 பயணம் செய்வோம் பகுதி கணக்கை பொறுத்தவரை
பாடநூலில் கொடுக்கப்பட்டுள்ள பக்கங்களில் உள்ள நாம் கற்பிக்கும் கற்றல் விளைவுகளுக்குரிய கணக்குகளை மட்டும் மாணவர்களை செய்ய வைத்தால் போதுமானது. கற்பிக்கும் முறை ஆசிரியர் கையெட்டில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயணம் செய்வோம் பகுதியில் குறிப்பிட்டுள்ள பக்கங்களில் கொடுத்துள்ள பயிற்சி கணக்குகளை செய்ய வைத்தால் போதுமானது. புதிதாக எதையும் கற்பிக்க தேவையில்லை. 

அனைத்து கருத்துகளுக்கும் கற்றல் செயல்பாடு ஆசிரியர் கையேட்டில் உள்ளது.

 அறிவியல் பாடநூலில் உள்ள பயிற்சிகளுக்கான கருத்துக்களை நாம் ஆசிரியர் கையேட்டில் கற்பித்திருப்போம்... ஆகவே பயிற்சிகளை மட்டும் செய்தால் போதுமானது...

31.கேள்வி :  " நானே செய்வேன் "- எனும் கட்டகத்தின் இறுதியிலுள்ள மதிப்பீட்டுப் பகுதியை, மாத இறுதித் தேர்வாக கருதலாமா?

 பதில் : இல்லை ... இது வளரறி மதிப்பீடு (ஆ) ஆகும்.

செயலியில் வாரந்தோறும் புதன்கிழமை மேற்கொள்வதற்கு முன்பு செய்யும் பயிற்சி தேர்வு.

மாதத் தேர்வு தனியாக செயலியில் pdfஆக வெளியிடப்படும்...

32.கேள்வி : நான்காம் வகுப்பு உள்ள அரும்புநிலை மாணவன் பயிற்சி புத்தகத்தில் நான்காம்  வகுப்பு அரும்பு பகுதியை மட்டும் செய்தால் போதுமா?

 பதில் : ஆமாம் ..
மாணவர்கள் நிலைக்கேற்ப பயிற்சிகளை மேற்கொண்டால் போதுமானது.

 33 .கேள்வி: In 4th std there are 24 students. Among them 5 in arumbu level,7 in mottu level,9 in malar level and 3 in 4th level means how I will give the activities ?

 பதில்:  கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளைப் பொறுத்தவரை ஆசிரியர் கையேட்டில் உள்ள செயல்பாட்டை நீங்கள் செய்தால் போதுமானது.

 கணக்குப் பாடத்தைப் பொறுத்தவரை செயல்பாட்டின் பொழுது நிலைக்கேற்ப எண்களை மாற்றிக் கொடுக்கலாம்.
நான்காம் வகுப்பு -10000 வரை
அரும்பு - 20 வரை
மொட்டு - 99 வரை
மலர் - 999 வரை

பயிற்சி நூலில் உள்ள பயிற்சிகளை மாணவர்கள் தங்கள் நிலைக்கேற்ப செய்யலாம்.

தங்கள் நிலையை விட அடுத்த நிலைக்கான பயிற்சிகள் தெரிந்தாலும் அவர்களை செய்ய அனுமதிக்கலாம்.

 34.கேள்வி: Ennum Ezhuthum - SA மதிப்பீடு குறித்த ஆசிரியர்களுக்கான தகவல்

இன்று நடைபெற்று கொண்டிருக்கும் தொகுத்தறி மதிப்பீட்டில்...

 பதில் :👇

 முதல் வகுப்பு

1. முதல் வகுப்பு மாணவர்களுக்கு அரும்பு நிலைக்குண்டான கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.

 2 ஆம் வகுப்பு

1. இரண்டாம் வகுப்பில் அரும்பு நிலையில் உள்ள மாணவர்கள் அரும்பு நிலைக்குண்டான  அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்கும் பட்சத்தில் அதற்கு அடுத்த நிலையான மொட்டு நிலை கொண்ட கேள்விகள் அவர்களுக்கு தோன்றும்.

2. அதே இரண்டாம் வகுப்பில் மொட்டு  நிலையில் உள்ள குழந்தைகளுக்கு மொட்டு நிலைக்கு உண்டான கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.

 3 ஆம் வகுப்பு

 1. மூன்றாம் வகுப்பில் அரும்பு  நிலையில் உள்ள மாணவர் அவர் நிலைக்குண்டான தொகுத்தறி மதிப்பீட்டில் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்கும் பட்ச த்தில் அதற்கு  அடுத்த நிலையான மொட்டு, மலர் நிலைக்கான கேள்விகள் அவருக்கு ஒன்றன்பின் ஒன்றாக தோன்றும்.

2. அதே மூன்றாம் வகுப்பில் மொட்டு நிலையில் உள்ள மாணவர்கள் அவர்கள் நிலைக்கு உண்டான தொகுத்தறி மதிப்பீட்டில் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்கும் பட்சத்தில் அதற்கு அடுத்த நிலையான மலர்  நிலைக்குண்டான கேள்விகள் அவருக்கு தோன்றும்.

3. அதே மூன்றாம் வகுப்பில் மலர்நிலை குழந்தைகளுக்கு அவர்கள் நிலைக்கு உண்டான கேள்விகள் மட்டுமே இடம்பெறும்...

 35.கேள்வி :  திங்கள்(த) புதன்(E) வெள்ளி(M) இரவு 8 முதல் 8:30 வரை மாதிரி வகுப்பு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். அதுபோல செவ்வாய் மற்றும் வியாழன் இரவு 8 மணிக்கு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்வுகள் என்ன?

 பதில்: திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவது 1 முதல் 3 வகுப்புகளுக்கு உரிய எண்ணும் எழுத்தும் மாதிரி வகுப்புகள் ..

செவ்வாய், வியாழக்கிழமைகளில் ஒளிபரப்பாவது 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் மாதிரி வகுப்புகள் ..

 36 .கேள்வி : மதிப்பீட்டு செயல்பாடு என்பது பயணம் செய்வோம் -ல் குறிப்பிடப்பட்டுள்ள Book, work book, -ல் வரும் மதிப்பீடு செயல்பாடுகளைக் குறிக்கிறதா? இல்லை வேறு எதுவும் உள்ளதா?

 பதில் : மதிப்பீட்டுச் செயல்பாடு என்பது நமது ஆசிரியர் கையேட்டில் பின்னிணைப்பில் கொடுத்துள்ள வளரறி மதிப்பீடு( அ) ஆகும்.

இங்குச் செயல்பாட்டிற்குரிய எண்ணை மட்டும்  குறிப்பிட்டால் போதும்.

 37.கேள்வி : அப்படியானால் பாடக்குறிப்பு எழுதும் போது ஒரு சில வாரங்கள் மதிப்பீடு செயல்பாடு எண் கொடுக்க முடியாத சூழல்  வருமே..? அனைத்து பாடவேளைகளுக்கும் FA(a) உள்ளதாக தெரியவில்லையே..

 பதில்: எப்பொழுது வருகிறதோ அப்பொழுது மட்டும் எழுதுங்கள். இது ஒவ்வொரு கட்டகத்திற்குமான மதிப்பீட்டுச் செயல்பாட்டை குறிக்கிறது.

 உதாரணமாக, இந்த வாரம் நீங்கள் எண்கள்- 1 கட்டகம் நடத்துகிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.
இதில் உள்ள நான்கு செயல்பாடுகளை நான்கு நாட்களுக்கும் குறித்து விடுவீர்கள். இதில் நான்காவது செயல்பாடு மதிப்பீட்டு செயல்பாடு கொடுக்கப்பட்டுள்ளது எனில், இந்த எண்ணை மதிப்பீட்டுச் செயல்பாடு என்ற இடத்தில் எழுதுவீர்கள்.

*38.கேள்வி* : அறிவியல் ஆசிரியர் கையேட்டில் முதல் பாடத்திற்கு 18 செயல்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது ..  கால அட்டவணையின்படி வாரத்திற்கு 2 பாடவேளைகள் வீதம் ஒரு பாட வேளையில் ஒரு ஆசிரியரால் எத்தனை செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும் ? அதை சமாளிப்பது எப்படி  ?

 *பதில்*:   மொத்தம் 53 செயல்பாடுகள்..
ஒரு வாரத்திற்கு 2 பாடவேளைகள்..
மொத்தம் 15 வாரங்கள்...
எனவே குறைந்தது ஒரு வாரத்தில் 4 செயல்பாடுகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்..

எளிய செயல்பாடுகள் என்பதால் இது குறித்து அச்சம் தேவை இல்லை...
 

*39.கேள்வி* : 4,5 வகுப்புகளை போதுமான ஆசிரியர்கள் இருந்தால் தனித்தனியாக வைத்துக் கொள்ளலாமா? அப்படி வைத்துக்கொண்டால் அந்தந்த வகுப்புக்குரிய செயல்பாடுகளை செய்தால் போதுமானதா?

 *பதில்* : போதுமானது..

 *40.கேள்வி* : ஒவ்வொரு வார புதன் கிழமைகளிலும் FA(b) தேர்வு APP மூலம் செய்ய வேண்டும் எனில் கணித பாடத்திற்கான remedial teaching  செய்வது எப்போது ?

 *பதில்*:  எந்தெந்த புதன்கிழமைகள் என்பது முன்கூட்டியே அறிவிக்கப்படும் ..அதே போல் குறைதீர் கற்பித்தலுக்காக * குறியீட்டுடன் கொடுக்கப்பட்டுள்ள பாடவேளைகளை ஆசிரியர் தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளலாம்..

 *41.கேள்வி* :  பயிற்சி நூல் ( *கணிதம்* ) எப்போது செய்ய வேண்டும் ?

 *பதில்* :  45 நிமிடங்கள் கற்றல் கற்பித்தலுக்காக.. மற்ற நேரத்தினை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும் ...

 *42.கேள்வி* :  பாடத்திட்டம் தனியே உள்ளதா எனக் கேட்கிறார்கள்?

பயிற்சித்தாளில் செய்யும் கேள்விகள்தான் செயலியில் தேர்வாக வருமா? அல்லது வேறு கேள்விகள் வருமா?

 *பதில்* : பாடத்திட்டம் தனியாக இல்லை ..

ஒரு நாளைக்கு ஒரு செயல்பாடு வீதம் மாணவர்களின் கற்றல் வேகத்திற்கு ஏற்ப பாடங்களை முடிக்க வேண்டும். *ஜூன்*- *20 க்குப்* பிறகு தான் முதல் பாடத்திற்கான வளரறி மதிப்பீடே தொடங்கும்.

 வளரறி மதிப்பீடு (ஆ) எந்தெந்த தேதிகளில் செய்ய வேண்டும் என்று பட்டியல் விரைவில் வெளியிடப்படும். 

 *கணக்குப்* *பாடத்தைப்* பொறுத்தவரை பயிற்சித் தாளில் உள்ள வினாக்களும் மற்றும் அதே முறையில் (same method) பதிலளிக்கக்கூடிய வேறு வினாக்களும் வரலாம்.

*43.கேள்வி* : பாடத்திட்டம் ஏதேனும் உள்ளதா.. ஒவ்வொரு மாதத்திற்கும் பாடம் முடிக்க வேண்டும் எனும் பாடத்திட்டம்..

 *பதில்* : எண்ணும் எழுத்து பாடக்குறிப்பு படிவம் மட்டுமே .. கூடுதலாக பருவ இறுதியில் மாணவர்களின் மதிப்பெண்களை printout எடுத்து வைத்தால் போதுமானது...

 *44.கேள்வி* : அறிவியல் பயிற்சி புத்தகத்தில் பாடப் பகுதியில் உள்ள அனைத்து வினாக்களுக்கும்  விடை எழுத இடம் கொடுக்கப்பட்டுள்ளதா????

 *பதில்* : பயிற்சி புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்க இடம் உள்ளது.... பாடநூலில் உள்ள மதிப்பீடு வினாக்களுக்கு மாணவர்கள் தமது அறிவியல் குறிப்பேட்டில் விடைகளை எழுத வேண்டும்... 

 *45.கேள்வி* : ஒரு அலகு கற்பிக்க தேவையான கால அளவு எவ்வளவு ?

 *பதில்*: ஒவ்வொரு அலகிற்கும் கால அளவானது மாறுபடும்... *அறிவியல்* *பாடத்தில்* *ஆகா* *அறிவியலில்* தொடங்கி *பயணம்* *செய்வோமா* வரை உள்ள பகுதியை ஒரு நாளில் கற்பிக்க வேண்டும்...

 *கணக்கு* *பாடத்தைப்* பொறுத்தவரை ஒவ்வொரு கட்டகமும் வேறுபட்ட எண்ணிக்கையில் செயல்பாடுகளை உள்ளடக்கியது. செயல்பாடுகளின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் கற்றல் வேகத்திற்கு ஏற்ப கட்டகம் முடிக்கும் நாள்களின் எண்ணிக்கை வேறுபடும்.

ஒரு செயல்பாடு என்பது ஒரு பாடவேளைக்கானது (90 நிமிடங்கள்).
இச்செயல்பாடானது ஒருங்கிணைந்தது (4மற்றும் 5ம் வகுப்பு) எனில் 1 மணி நேரம் கற்பித்தல் செயல்பாடு முடித்து 30 நிமிடங்கள் பயிற்சி நூலில் பயிற்சி கொடுக்கலாம்.

சில செயல்பாடுகள் நான்காம் வகுப்பிற்கு தனிப்பாடமாகவும் ஐந்தாம் வகுப்பிற்கு தனிப்பாடமாகவும் இருந்தால் முதல் முக்கால் மணி நேரம்  நான்காம் வகுப்பிற்கு (அரைமணி நேரம் கற்பித்தல் பிறகு பயிற்சி நூல் செயல்பாடு )

அடுத்த முக்கால் மணி நேரம்  ஐந்தாம் வகுப்பிற்கு (அரைமணி நேரம் கற்பித்தல் பிறகு பயிற்சி நூல் செயல்பாடு )

*46.கேள்வி* : அறிவியல்  கட்டகம் வாரியாக  செயல்பாடுகள்  என்னென்ன?  

 *பதில்* :  1. எனது உடலும் உறுப்பு மண்டலங்களும் - 18

2. பருப்பொருள் மற்றும் மூலப்பொருள்கள் - 11

3. வேலை மற்றும் ஆற்றல் - 14

4. அன்றாட வாழ்வில் அறிவியல் - 11

மொத்த செயல்பாடுகள் -54

*47.கேள்வி* :  அறிவியலில் பாடத் தலைப்புகளுக்குரிய QR code  விளக்கம் ?

 *பதில்* : 1. பாடப்பொருள்
 2. மதிப்பீடு
 3. துணை கருவிகள் ...ஆகிய மூன்றும் இடம் பெற்றிருக்கும்..

No comments:

Post a Comment