ஈட்டிய விடுப்புகளை சரண் செய்து ஊதியமாகப் பெறும் நடைமுறையை மீண்டும்
செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரசு
துறையில் பணியாற்றுவோருக்கு ஈட்டிய விடுப்பு அதாவது EL பற்றிய சில விஷயங்களை
பார்ப்போம். தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period
தள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஆண், பெண் இருவரும்
ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் தகுதிகாண் பருவம் முடிக்கும்
முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த
வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன்
சேர்த்துக்கொள்ளப்படும். (உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது
என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10=170) மீதம்
உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே
கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்) வருடத்திற்கு 17 நாட்கள் EL.
அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் . மீதமுள்ள 2 நாட்கள்
சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம். 21
நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும். வருடத்திற்கு மொத்தம் 365
நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21. எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு
நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது. மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில்
ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் ,
மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL
கணக்கிடப்படும். ML & EL எடுத்தது போக மீதம் உள்ள வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே
EL கணக்கிடப்படும். (CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது) ஒரு நாள்
மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம். அரசு ஊழியர்களுக்கு மட்டும்
வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15
நாட்களை ஒப்படைக்கலாம். மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்ச
மாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை
எந்தவிதத்திலும் பயனில்லை. மாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற
நிகழ்வுகளின் போது பழைய இடத்திற்கும் புதிய இடத்திற்குமிடையே குறைந்தது 8 கி.மீ
(ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் EL கணக்கில் சேர்த்துக்
கொள்ளப்படும். இதற்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள்
கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5நாட்கள். 160 கி.மீ க்கு மேற்படின்
அட்டவணைப்படி நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்) ஒருமுறை சரண்டர் செய்த அதே
தேதியில் தான் ஆண்டுதோறும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கணக்கீட்டிற்கு
வசதியாக இருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில்
ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண் செய்வது சிறந்தது.
எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15
நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி
இருக்க வேண்டும். ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ,
அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ, ECS ஆகும் தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு
செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை. EL ஒப்படைப்பு நாளின் போது குறைந்த அளவு
அகவிலைப்படியும் பின்னர் முன்தேதியிட்டு DA உயர்த்தப்படும் போது ஒப்படைப்பு
நாளில் அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய
நிலுவையையும் சேர்த்து சுதந்தரித்துக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன்தேதியிட்டுப்
பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர்
நிலுவையும் பெறத் தகுதியுண்டு. பணிநிறைவு / இறப்பின் போது இருப்பிலுள்ள EL
நாட்களுக்குரிய (அதிகபட்சம் 240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில்
கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும். அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள்
ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம். 180
நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்கு வீட்டுவாடகைப்படி கிடைக்காது இதுதான் 2018ம்
ஆண்டுப்படி தமிழ்நாட்டில் இருந்த நிலவரம் ஆகும். ஆனால் இந்த தகவல்களை
பேஸ்புக்கில் தமிழக அரசு ஊழியர் ஒருவர் கூறியிருந்தார். ஆனால் ஈட்டிய விடுப்பை
சரண் செய்து ஊதியமாகப் பெறும் நடைமுறையானது கொரோனா காலத்தில் ரத்து
செய்யப்பட்டது. மேலும் அது தொடர்பான அரசாணையும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. சரி
இப்போது என்ன விஷயம் என்பதற்கு வருவோம். நிதி, மனிதவள மேலாண்மை, மின்சாரத் துறை
அமைச்சா் தங்கம் தென்னரசுவை, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவா்
கு.வெங்கடேசன் தலைமையில் சங்க நிா்வாகிகள் புதன்கிழமை நேரில் சந்தித்தனர். லைமைச்
செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, கோரிக்கைகள் அடங்கிய மனுவை
அளித்தனா். அவர்கள் தங்கள் மனுவில் கூறிருந்ததாவது: ஈட்டிய விடுப்பை சரண் செய்து
ஊதியமாகப் பெறும் நடைமுறையானது, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ரத்து
செய்யப்பட்டது. காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.
தமிழகத்திலுள்ள லட்சக்கணக்கான அரசு ஊழியா்கள், ஆசிரியா்களும் தங்களது விடுப்பை
ஒப்படைத்து ஊதியமாகப் பெறும் நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. ஆனால்,
தற்போது கலைவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், கடுமையான நிதி நெருக்கடிக்கு
ஆளாகியுள்ளனா். எனவே, முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு திட்டத்தை ரத்து
செய்து மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஈட்டிய விடுப்பை சரண் செய்து ஊதியமாகப் பெறும் நடைமுறை மீண்டும் நடந்தால் அரசு
ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். வருடத்திற்கு பெரும் தொகை அவர்களுக்கு
கிடைக்கும். இது தொடர்பாக மனிதவள மேலாண்மை துறைக்கும் அமைச்சரான தங்கம் தென்னரசு,
முதல்வர் ஸ்டாலினுடன் பரிந்துரைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்களிடம்
எழுந்துள்ளது.
Thursday, June 22, 2023
New
தமிழக அரசு ஊழியர்களின் காதில் தேன் வந்து பாயுமா.. தென்னரசுவுடன் சத்தமில்லாமல் நடந்த சந்திப்பு
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment