இணையதள கட்டணம் தலைமை ஆசிரியர்கள் புலம்பல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, March 16, 2024

இணையதள கட்டணம் தலைமை ஆசிரியர்கள் புலம்பல்

இணையதள கட்டணம் தலைமை ஆசிரியர்கள் புலம்பல் 

                தமிழகம் முழுவதும் உள்ள 28,000 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கணினி ஆய்வகமும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

         அனைத்து தொடக்க நடுநிலைப் பள்ளிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்தப்பட உள்ளன பள்ளிகளில் 100mbps வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் பலர் இணைப்பைப் பெற்றனர் 


        ஆனால் இதுவரை அதற்கான எந்த வித செலவு தொகைகள் அரசால் வழங்கப்படவில்லை. தலைமை ஆசிரியர்களே தங்களுடைய சொந்த பணத்தை போட்டு இணைப்பைப் பெற்று விட்டனர். இதனால் மாதத்திற்கு 3 ஆயிரம் முதல் மாத கட்டணம் வருகிறது. மாத கட்டணத்தை இரண்டு மாதமாக கட்டி வருகின்றனர். இதுகுறித்து அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தலைமை ஆசிரியர்கள் குழம்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment