SSLC (பத்தாம்) வகுப்பு தேர்வு தொடர்பான செய்திகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, March 23, 2024

SSLC (பத்தாம்) வகுப்பு தேர்வு தொடர்பான செய்திகள்

பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான செய்திகள்

*அனைவருக்கும் என் பணிவான வணக்கம்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

S S LC - பத்தாம் வகுப்பு ....

1. காலை 08.45 மணிக்கு முன் தேர்வு கட்டுப்பாட்டு அறைக்குள் வந்து விட வேண்டும்.
2. மொபைல் போன் ஸ்விட்ச் ஆப் செய்து ஒப்படைத்து விட வேண்டும்.
3. அடையாள அட்டை அணிய வேண்டும்.
4. வருகை பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும்.
5. குலுக்கல் முறையில் சீட்டினை எடுத்து அதில் குறிப்பிட்டுள்ள அறைக்கான பையை எடுத்து அதனுள் உள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து விடைத்தாள் பக்கங்களும் சேதமடையாமல் சரியாக இருப்பது, மாணவர் வருகை சீட்டின்படி விடைத்தாள் (டாப்சீட்) சரியாக உள்ளதா மற்றும் ஸ்பெசிமன் சீல் உள்ளதா என்பதை உறுதி செய்த பின் டாப்ஷீட் இன் மேல் வலது பக்கம் Verified என்று எழுதி தேதியுடன் சுறுக்கொப்பமிட  வேண்டும்.
6. பையில் கத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
7. 09.30 மணிக்கு வினாத்தாள் பெற்றவுடன் பைக்குள் அதை வைத்து தேர்வு அறைக்கு சென்றுவிட வேண்டும்.
8. 09.40 மணிக்கு அறைக்குள் மாணவர்கள் வருகையின் போது காலணி, பெல்ட், கைபை, துண்டுச் சீட்டு, கால்குலேட்டர் மற்றும் சாதாரண கை கடிகாரமா போன்றவை சோதனை செய்ய வேண்டும்.
9. உரிய இடத்தில் அமர்ந்தப்பின் ஹால் டிக்கெட் சோதனை செய்து, மாணவர் வருகைப் பதிவேட்டில்  கைப்பமிட அனுமதிக்க வேண்டும்.
 *மாணவர்களுக்கான அறிவுரை (10 - 15)*
10. விடைத்தாளில் மாணவர்களின் பெயர், பதிவெண், தேதி, பாடம், ஃபோட்டோ, ஸ்பேசிமன் சீல், சேதம் இல்லாத பேப்பர், இணைப்புத் தாள்கள் (படிவம், கிராப், மேப் போன்றவை) சரியாக உள்ளதா என்பதை பார்த்த பின் மாணவர்களை கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும்.
11. விடைத்தாளில் அடிப்பகுதியில் மட்டுமே ரஃப் வொர்க் செய்ய அறிவுறுத்த வேண்டும்.
12. எழுதிய விடையை அடித்தால் இது என்னால் அடிக்கப்பட்டது என்று எழுத அறிவுறுத்த வேண்டும்.
13. கூடுதல் விடைத்தாள் தேவைப்பட்டால் கடைசி 2 பக்கம் முன் தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும்.
14. விடைத்தாளில் எங்கேயும் பதிவெண் மற்றும் பெயர் எழுத கூடாது என்பதை அறிவுறுத்த வேண்டும்.
15. 09.55 மணிக்கு வினாத்தாள் கவரை திறக்கும் முன் 2 மாணவர்களிடம் நேரத்துடன் தேதி குறிப்பிட்டு கையொப்பம் மற்றும் பதிவெண் குறிப்பிட வேண்டும்.
16. 10.00 மணிக்கு வினாத்தாள் வழங்கி 10 நிமிடம் நாம் அமைதியாக இருக்க வேண்டும்.
17. 10.10 க்கு மேல் விடைத்தாளில் மாணவர் கையொப்பம் உள்ளதை உறுதி செய்த பின்பு Present (டிக்) அல்லது Absent - Red (X) குறிப்பிட்டு நாம் தேதியுடன் கையொப்பமிட வேண்டும்.
18. 10.15 மணிக்கு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
19. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் மணி அடிக்கப்படும்.
20. 01.10 Warning Bell அடிக்கப்பட்டு 01.15 Long Bell அடித்த பின் எழுதுவதை நிறுத்தி நிற்க சொல்லி விடைத்தாள் சேகரித்து பையில் வைத்து தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு உடனே வந்துவிட வேண்டும்.

இதில் திருத்தம் ஏதேனும் இருப்பின் உடனடியாக தெரிவிக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி🙏

No comments:

Post a Comment