கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள, குறைந்தபட்ச அளவை விட குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உடைய பள்ளிகளை மூட, அரசு முடிவு செய்துள்ளது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 19, 2024

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள, குறைந்தபட்ச அளவை விட குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உடைய பள்ளிகளை மூட, அரசு முடிவு செய்துள்ளது

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மார்ச் 1 முதல், மாணவர் சேர்க்கை பணி துவங்கப்பட்டுள்ளது. அதேநேரம், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள, குறைந்தபட்ச அளவை விட குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உடைய பள்ளிகளை மூட, அரசு முடிவு செய்துள்ளது. 

         அதாவது, கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, தலா, 30 மாணவர்; ஆறு முதல் எட்டு வரை தலா, 35; ஒன்பது மற்றும் 10ம் வகுப்புக்கு தலா, 40 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் தலா, 50 மாணவர்கள் குறைந்தபட்சம் இருக்க வேண்டும். 

             இதன்படி, தமிழகம் முழுதும் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள பள்ளிகளை மூட, தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 31 தொடக்கப் பள்ளிகளும், ஒரு நடுநிலைப்பள்ளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியரை அருகில் உள்ள பிற அரசு பள்ளிகளில் சேர்க்க, கல்வித்துறை இயக்குனர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

                இந்த பட்டியலில், உளுந்துார் பேட்டை ஒன்றியத்தில் உள்ள எலவனாசூர் ஊராட்சி பள்ளியில், மொத்தம் உள்ள ஐந்து வகுப்புகளில், ஒன்றாம் வகுப்பில் மட்டும் ஒரே ஒரு மாணவி படிப்பது தெரியவந்துள்ளது. அதே ஊரில் உள்ள இன்னொரு பள்ளியில், 1,3,4,5 வகுப்புகளில், தலா ஒரு மாணவர் படிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ரிஷிவந்தியம் ரெட்டியார் பாளையம் ஊராட்சி பள்ளியில், மூன்று பேர் மட்டும் படிப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

         இந்த பள்ளிகளின் மாணவ - மாணவியரை, அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 13 ஆசிரியர்கள், 23 தலைமை ஆசிரியர்கள், மாணவர் விகிதத்தை விட உபரியாக உள்ளனர். அவர்களையும் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment