காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் –ஆசிரியர் கூட்டம்இ முதன்மை கல்வி அலுவலர் குமார் பேச்சு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 24, 2014

காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் –ஆசிரியர் கூட்டம்இ முதன்மை கல்வி அலுவலர் குமார் பேச்சு

காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் –ஆசிரியர் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை ஆசிரியை செல்வராணி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் தயாளன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் என்.சி.சி. அலுவலர் க.ராஜா வரவேற்றார். 
கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் குமார் கலந்துகொண்டு,

பேசுகையில், ‘‘படிப்பு தான் பதவியை நிர்ணயிக்கும். உங்களின் குழந்தைகள் எந்தவிதத்திலும் சமுதாயத்தில் குறைந்தவர்கள் அல்ல. மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றால் அதுவே பெற்றோருக்கு போடும் உணவாகும். அரசு தேர்வுகளை சந்திக்கும் மாணவர்களுக்கு இன்னும் 5 மாதங்களில் தேர்வு நடக்கிறது. ஆசிரியர்கள் கல்வி, ஞானம் ஆகியவற்றை கொடுக்கின்றனர்’’ என்றார்.
மேலும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், பெற்றோர்கள் மாணவர்களிடம் காட்ட வேண்டிய அக்கறைகள் ஆகியவை குறித்து பேசினார்.
கூட்டத்தில் கடந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார். 
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சரஸ்வதி, ஷோபனா, செல்வராஜன், டேனியல்தேவபிரசாத், சிவஞானம், மஞ்சுளா, சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் தயாளன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment