பட்டதாரி ஆசிரியர்களைப் போன்று தேர்வுநிலை அந்தஸ்து பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் தர ஊதியத்தையும் ரூ.4600-லிருந்து ரூ.4,800 ஆக உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனருக்கு தமிழக அரசின் நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 28, 2014

பட்டதாரி ஆசிரியர்களைப் போன்று தேர்வுநிலை அந்தஸ்து பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் தர ஊதியத்தையும் ரூ.4600-லிருந்து ரூ.4,800 ஆக உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனருக்கு தமிழக அரசின் நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றி வந்தால் அவர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்கப் பட்டு அடுத்த நிலை பதவிக்குரிய சம்பளம் வழங்கப்படும். ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்
பதவி, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இணையானதாக

கருதப் பட்டு அதே ஊதிய விகிதம் (அடிப்படைச் சம்பளம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,600) நிர்ணயிக் கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுநிலை அந்தஸ்து பெறும்போது அவர்களின் தர ஊதியம் ரூ.4600-லிருந்து ரூ.4,800 ஆக உயர்த்தி ஊதியம் திருத்தி யமைக்கப்படுகிறது. இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர்களைப் போன்று தேர்வுநிலை அந்தஸ்து பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் தர ஊதியத்தையும் ரூ.4600-லிருந்து ரூ.4,800 ஆக உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனருக்கு தமிழக அரசின் நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools, 

No comments:

Post a Comment