நேர்முகத்தேர்வு தேதியை வெளியிட்ட யு.பி.எஸ்.சி. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 31, 2014

நேர்முகத்தேர்வு தேதியை வெளியிட்ட யு.பி.எஸ்.சி.

ஒருங்கிணைந்த ஜியோ-சயின்டிஸ்ட் மற்றும் ஜியாலஜிஸ்ட் தேர்வு - 2014ல் தேறியோருக்கான நேர்முகத் தேர்வு தேதியை, UPSC அறிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கான நேர்முகத் தேர்வு, வரும் நவம்பர் 10 முதல், நவம்பர் 24ம் தேதிக்குள், புதுடில்லியில் நடைபெறும்.
தேர்வுசெய்யப்பட்ட நபர்கள், UPSC வலைதளம் சென்று, தங்களின் roll number -ஐ சரிபார்த்துக் கொள்ளலாம். இந்த நேர்முகத்தேர்வு, வெவ்வேறு நாட்களில் நடத்தப்படும். கலந்துகொள்ளக்கூடிய நபர்களுக்கான தகவல், கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வோர், சமீபத்தில் எடுத்த 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன், இதர தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும், குறிப்பிட்ட நாளில் கொண்டுவர வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு    http://www.upsc.gov.in/

No comments:

Post a Comment