மெட்ராஸ்-ஐ வேகமாக பரவுகிறது பாதுகாக்கும் வழிமுறைகள்:- - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 29, 2014

மெட்ராஸ்-ஐ வேகமாக பரவுகிறது பாதுகாக்கும் வழிமுறைகள்:-

மெட்ராஸ்-ஐ’ பாதித்தவர்களை மற்றவர்கள் பார்த்தாலே தங்களுக்கும் இந்நோய் பரவும் என்று மக்கள் மத்தியில் தவறாக கருத்து நிலவுகிறது. இந்நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிகப்பாக இருக்கும். கண்ணில் இருந்து நீர் வடியும். அதிக உறுத்தல் இருக்கும். காலையில் கண் விழிக்கும்போது கண்களை திறக்க கடினமாக இருக்கும். இதுதான்
இந்நோயின் அறிகுறிகளாகும். கண்ணில் இருந்து வடியும் நீரினால் இந்நோய் மற்றவர்களுக்கு பரவும். கிருமி பாதிப்புள்ள அந்த நீர் பிறர் கையில் படும்போது அவருக்கு கண் நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் மற்றவர்களுக்கும் வரும். கண் நோய் பாதித்தவர்கள் பயன்படுத்தும் படுக்கை, துண்டு போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. எனவே, கண் நோய் பாதிக்கப்பட்டவர்கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கண் நோய் வந்தால் குறைந்தது 5 முதல் ஒரு வாரம் வரை இருக்கும். கண் நோய் பாதித்தவர்கள் சுயமாக சொட்டு மருந்து எடுத்துக் கொள்ளாமல், கண் மருத்துவரை அணுகி முறையாக சிகிச்சை பெற வேண்டும்.

No comments:

Post a Comment