பெயிலான மற்றும் தனித்தேர்வர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. அக்டோபர் மாத தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 24, 2014

பெயிலான மற்றும் தனித்தேர்வர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. அக்டோபர் மாத தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது.

இணையதளத்தில் வெளியிடப்படாது. மதிப்பெண் சான்றிதழ்களை, தேர்வு எழுதிய பள்ளிக்கூடங்களில் நாளை(சனிக்கிழமை) முதல் பெற்றுக்கொள்ளலாம்.
தேர்வு முடிவைநாளை அறியலாம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெயிலான மாணவ-மாணவிகள், தனியாக படித்து தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் தேர்வு எழுதினார்கள்.

தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்படாது. முடிவை தேர்வு எழுதிய பள்ளிக்கூடங்களில் மதிப்பெண்சான்றிதழ் பெறுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்களை நாளை(சனிக்கிழமை) முதல் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
மறுகூட்டலுக்குவிண்ணப்பித்தல்:
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசு தேர்வுத் துறை சேவை மையங்கள் மூலம் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நேரில் சென்று மறுகூட்டல் கட்டணத்துடன் கூடுதலாக ஆன்-லைன் பதிவு கட்டணமாக ரூ.50 -ஐ பணமாகச் செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பித்தபின் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை (அப்ளிகேசன் நம்பர் ) பயன்படுத்தியே தேர்வுத் துறையால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் மறுகூட்டல் முடிவுகள் பற்றி அறிய இயலும் என்பதால் ஒப்புகைச் சீட்டை பாதுகாப்புடன் வைத்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்
2015-ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் 29-ந்தேதி முதல் நவம்பர் 7-ந்தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
வருகிற 2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி அன்று 14லு வயது பூர்த்தி செய்து மத்திய-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8 -ம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ-மாணவியரும் மற்றும் 9 -ம் வகுப்பு பயின்று இடையில் நின்ற மாணவ -மாணவியரும், தேர்வு துறையால் நடத்தப்படும் 8 -ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்களும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment