மும்பையில் வசிக்கும் 11 வயது சிறுமி ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸிடம் பேட்டி எடுத்துள்ளார்.
மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் 11 வயது சிறுமி திருஷ்டி. இவர் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வசித்து வரும் சயாத்திரி விருந்தினர் இல்லம் அருகே வசித்து வருகிறார்.
பள்ளியில் அளிக்கப்பட்ட வீட்டுப்பாடம் தொடர்பாக மாநில முதலமைச்சரை சந்திக்க
சென்ற திருஷ்டியை பாதுகாப்பாளர்கள் தடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் மனமுடைந்துபோன திருஷ்டி, உடனடியாக தேவேந்திர பட்னாவிஸிற்கு கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில், ‘பாதுகாப்பாளர்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. நீங்கள் இந்த கடித்தத்தை பார்க்கும்போது என்னை இந்த செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். இல்லையென்றால், நீங்கள் என்னை அதிகாரப்பூர்வமாக உள்ளே அழைத்ததாக சொல்ல யாரையாவது எனது முகவரிக்கு அனுப்புங்கள். (பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடத்திற்காக எனக்கு ஒரு பேட்டி தேவை)’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தின் இறுதியில், ‘தயவு செய்து இந்த கடிதத்தை புறக்கணிக்க வேண்டாம்’ என எழுதப்பட்டிருந்தது.
இந்த கடிதம் கிடைத்த அதே நாள் கடிதம் எழுதிய சிறுமி வரவழைக்கப்பட்டு அவர் வீட்டுப்பாடத்தை முடிக்கும் வரை முதலமைச்சர் அவருடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment