இன்று சர்வதேச நீரிழிவு நோய் தினம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 14, 2014

இன்று சர்வதேச நீரிழிவு நோய் தினம்

: உலகிலேயே அதிகளவில் நீரிழிவு நோயாளிகள் இந்தியாவிலும், சீனாவிலும்தான் உள்ளனர். பாரம்பரிய தன்மை கொண்டதாக இருந்தாலும், நம் வாழ்க்கை முறை முற்றிலும், மேலைநாட்டு நாகரீகத்தை தழுவி விட்டதால், இன்று அதிக அளவில் உள்ளது. இன்று இந்தியாவில், ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது.இதனால், சிறுநீரகம், நரம்பு, கண்பார்வை ஆகியவை பாதிக்கப்படும் வாய்ப்பும், மாரடைப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம். மாதம் ஒரு முறையாவது
மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.மூன்று மாதத்துக்கு ஒரு முறை கண், நரம்பு, சிறுநீரகம் மற்றும் இதயம் ஆகியவை பரிசோதனை செய்ய வேண்டும். ஒருவருக்கு மாரடைப்பு வந்தால், எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமோ, அதே அளவு நீரிழிவு நோயினாலும் உருவாகும். நீரிழிவு நோய் உள்ளவர்களில் பெரும்பாலனோருக்கு உயர் ரத்த அழுத்தமும், ரத்தத்தில் அதிக கொழுப்பு சத்தும் இருக்கும். இதை கண்டறிந்து, சிகிச்சை பெற வேண்டும்.சரியான உடற்பயிற்சி, எடையை அளவோடு வைத்துக்கொள்ளுதல், கொழுப்பு குறைந்த உணவை உட்கொள்ளுதல், நார்ச்சத்து, கீரை, காய்கறிகளை தினமும் உட்கொள்ளுதல், மன உளைச்சலை குறைத்தல் போன்றவை நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்
  • சர்வதேச நீரிழிவு நோய் தினம்
  • இந்திய குழந்தைகள் தினம்
  • இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினம்(1889)
  • டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1996)
  • செக்கோஸ்லவாக்கியா குடியரசு தினம்(1918)

No comments:

Post a Comment