ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது முடிசூட்டு விழாவை சிறப்பாக கொண்டாட இந்திய கடற்படை ஏற்பாடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 3, 2014

ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது முடிசூட்டு விழாவை சிறப்பாக கொண்டாட இந்திய கடற்படை ஏற்பாடு

தமிழகத்தின் தஞ்சைத் தரணியை தலைநகராக கொண்டு, இமயம் முதல் குமரிவரை என்ற எல்லைகளை எல்லாம் கடந்து இலங்கையின் மீதும் போர் தொடுத்து தமிழனின் பெருமையை தரணிக்கு நிலைநாட்டிய பெருமைக்குரிய மாமன்னர், பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜேந்திர சோழன்.

ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கடற்படையின் துணையுடன் கங்கை ஆற்றை கடந்து, தென்கிழக்கு ஆசியக் கண்டத்தில் ஆட்சியை நிறுவிய ராஜேந்திர சோழனின் புகழையும், பெருமையும் கொண்டாடும் விதமாக அவரது அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாட இந்தியக் கடற்படை முடிவு செய்துள்ளது.

இதற்காக, உலகைச் சுற்றி வலம் வந்துக் கொண்டிருக்கும் இந்தியக் கடற்படைக்கு சொந்தமான பயிற்சி மற்றும் பயணக் கப்பலான ‘ஐ.என்.எஸ். சுதர்ஷினி’ கேரள மாநிலம் கொச்சி நகரை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள துறைமுகத்தில் இருந்து போர் கப்பல்களை அனுப்பி ஜாவா, சுமத்ரா மற்றும் மலேசியாவில் உள்ள பல தீவுகளின் ஆட்சியை ராஜேந்திர சோழன் கைப்பற்றியதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

அந்த நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஐ.என்.எஸ். சுதர்ஷினி கப்பலில் இருந்தவாறு இந்திய கடற்படை வீரர்கள் வீரதீர சாகச நிகழ்ச்சிகளை நடத்தி காட்டுவார்கள். இந்த கப்பலை சென்னை துறைமுகத்தில் இருந்து தமிழக கவர்னர் ரோசைய்யா கொடி அசைத்து வழியனுப்பி வைக்கிறார் என்று தமிழகம் மற்றும் புதுவைக்கான கடற்படை பொறுப்பாளர் அமர் கே. மகாதேவன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment