விபத்தில் சிக்கியவர்களுக்கு போக்குவரத்து போலீசாரால் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) மிகவும் முக்கியமானதாகும். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீட்டு தொகையை பெறுவதற்கும் விபத்தில் சேதமடையும் வாகனங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை
பெறுவதற்கும் இந்த ஆவணம் கண்டிப்பாக தேவைப்படுகிறது.
இப்படி முக்கியத்துவம் வாய்ந்த முதல் தகவல் அறிக்கையை பெறுவதில் பொது மக்களுக்கு பல்வேறு சிரமங்களும் நடைமுறைச் சிக்கல்களும் இருந்து வந்தன. ஒருசில காவல் நிலையங்களில் எப்.ஐ.ஆர். நகலை வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் நடையாய் நடக்கும் அவலமும் இருந்து வந்தது.
இதனை தவிர்ப்பதற்காக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்.ஐ.ஆர். நகல்களை அனுப்பி வைக்கும் புதிய நடைமுறை சென்னை போலீசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10–ந்தேதி அமல்படுத்தப்பட்ட இந்த புதிய முறையின்படி 1.11.2014 முதல் நடைபெற்ற விபத்துக்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கை நகல்கள் பொதுமக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் 241 பேருக்கு தபால் மூலமாக எப்.ஐ.ஆர். நகல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment