கணினி பட்டதாரிகள் பட்டியல் வெளியாவது எப்போது? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 14, 2014

கணினி பட்டதாரிகள் பட்டியல் வெளியாவது எப்போது?

கணினி ஆசிரியர்களுக்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியாவது எப்போது

தலைமை அலுவலகத்தில் இருந்து இறுதி பட்டியல் கிடைத்ததும், வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநில பதிவு மூப்பு அடிப்படையில், 652 கணினி ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, பதிவு மூப்பு பட்டியல் பெறபட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், கணினி பி.எட்., பட்டதாரிகளின் சான்றிதழ் நகல்கள், கடந்த 3ம் தேதி வரை பெறப்பட்டுள்ளன. இதுகுறித்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கூறுகையில், 'பரிந்துரை பட்டியல் மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறுதி பட்டியல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து கிடைத்ததும், மீண்டும் அறிவிப்பு வெளியிடப்படும்' என்றார்.

No comments:

Post a Comment