நிலகோட்டை: திண்டுக்கல் அருகே அரசு பள்ளியில் பிளஸ் 1 மாணவனை அடித்து கொலை செய்த சக மாணவனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், நிலகோட்டை அருகே விளாம்பட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு விளாம்பட்டி அருகே எத்திலோடு காலனியை சேர்ந்த ஆசையன் மகன் வினோத் (16) பிளஸ் 1 படித்து வந்தான். இதே வகுப்பில்
விளாம்பட்டி, முத்தாலபுரத்தை சேர்ந்த கார்த்திக் (16, பெயர் மாற்றப்பட்டுள்ளது) படித்து வருகிறான். முதலில் நண்பர்களாக இருந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 10ம் தேதி பள்ளி வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். நேற்று பள்ளி இடைவேளையில் வகுப்பறையை விட்டு வெளியே வந்தபோது, வினோத் கழுத்தின் பின்புறம் கார்த்திக் தாக்கினான். இதில் வாயில் நுரை தள்ளிய நிலையில், வினோத் மயங்கி விழுந் தான். இதனால் மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந் தனர். உடனடியாக ஆசிரியர்கள் வந்து அவனை வகுப்பறைக்கு தூக்கி சென்றனர்.
அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பின்னர் நிலகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வினோத் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து வினோத் தின் உறவினர்கள் நிலகோட்டை அரசு மருத்துவமனை முன் குவிந்தனர். அவர்கள் பள்ளி ஆசிரியர்களின் அஜாக்கிரதையே மாணவர்கள் மோதலுக்கும் உயிரிழப்புக்கும் காரணம் என குற்றம் சாட்டினர். டிஎஸ்பி கருப்பசாமி, இன்ஸ்பெகடர் சுரேஷ் தலைமையில் 50கும் மேற்பட்ட போலீசார் மருத்துவமனை வளாகத்தில் குவிகப்பட்டனர்.
மாணவன் இறந்ததால் பள்ளிக¢கு உடனடியாக விடுமுறை விடப்பட்டது. இதுகுறித்து விளாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவன் கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் நிலகோட்டை தாசில்தார் மோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி, மாவட்ட கல்வி அலுவலர் மாலா மணிமேகலை ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர். முன்வி ரோத தகராறில் பள்ளியிலேயே மாணவனை, சக மாணவன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment