கணினி தமிழ் விருதுக்கு அழைப்பு;- - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 13, 2014

கணினி தமிழ் விருதுக்கு அழைப்பு;-

முதல்வர் கணினி தமிழ் விருது’க்கு விண்ணப்பிக்க அழைப்பு

'முதல்வர் கணினி தமிழ் விருது' பெற விரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம், ’முதல்வர் கணினி தமிழ் விருது’ வழங்கப்படுகிறது. விருது தொகை, 1 லட்சம் ரூபாயுடன், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இவ்வகையில், 2014ம் ஆண்டு விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

போட்டிக்குரிய மென்பொருள்கள், 2011, 2012, 2013க்குள், தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, தமிழ் வளர்ச்சித் துறை வலை தளத்தில் ( www.tamilvalarchithurai.org ) இலவசமாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விருதுக்கான விண்ணப்பம், தமிழ் வளர்ச்சி இயக்கத்திற்கு, டிச., 31ம் தேதிக்குள், ’தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை - 600 008’ என்ற முகவரிக்கு, அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413, ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment