அக்டோபர் 2 ஆம் தேதி ’ஸ்வாச் பாரத்’ திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தபோது நாடு முழுவதும் பெரும் பரபரப்பு கிளம்பியது. ஏராளமான, பள்ளி கல்லூரி மாணவர்கள் 'தூய்மை இந்தியா' முழக்கத்துடன் ஊர்வலம் சென்றார்கள்.
அதேநாளில், ராஜஸ்தான் மாநிலம் பிம் நகரில் சுமார் 500 மாணவிகள் கலந்துகொண்ட ஓர் ஊர்வலம் நடந்தது. அனைவரும்
தூய்மையான உடை அணிந்து, வீதிகளில் மிகுந்த ஒழுங்குடன் அணிவகுத்து உரத்தக் குரலில் முழக்கங்களை எழுப்பியபடியே சென்றனர்.
அவர்கள் எந்த அரசியல் கட்சியாலும் அணிதிரட்டப்பட்டவர்கள் அல்ல. எந்த இயக்கமும் அவர்களை ஒருங்கிணைக்கவில்லை. அந்த மாணவிகள் தாங்களாகவே ஒன்றிணைந்து அந்த ஊர்வலத்தை நடத்தினார்கள். அவர்களின் நோக்கம் மிகவும் எளிமையானது மற்றும் நேரடியானது. ‘எங்கள் பள்ளிக்கூடத்துக்கு போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமியுங்கள்’ என்பதே ஊர்வலம் சென்ற மாணவிகளின் ஒற்றைக் கோரிக்கை.
இவர்கள் படிக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையில் 700 மாணவிகள் படிக்கிறார்கள். ஆனால் இருப்பதோ வெறும் மூன்று ஆசிரியர்கள். கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியரே இல்லை. இருக்கும் மூன்று பேரில் ஒருவர் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகிக்க வேண்டியுள்ளது. கணக்கு அறிவியல், வரலாறு, புவியியல், இந்தி போன்ற எந்த பாடத்துக்கும் பாடவாரியான ஆசிரியர் இல்லை. இந்தப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக மேம்படுத்தப்பட்டதில் இருந்து, அதாவது கடந்த 10 ஆண்டுகளாக, 11 ஆசிரியர் பணியிடங்கள் தொடர்ந்து காலியாகவே இருக்கின்றன. கிராம மக்கள் எத்தனையோ முறை மனு கொடுத்தும், முறையிட்டும் சிறு நடவடிகையும் இல்லை.
கல்வித்துறை அதிகாரிகளின் குழந்தைகள் அனைவரும் தனியார் பள்ளியில் படிப்பதால் அவர்கள் இந்த அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலன் குறித்து சிந்திப்பதே இல்லை. இந்தப் பள்ளியில் படிப்பது மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளே. ஒவ்வொரு நாளும் பேருந்துக்கு 20 ரூபாய் செலவழித்து 15 கி.மீ. தூரத்தை கடந்து பள்ளிக்கு வருகின்றனர். இவ்வளவு சிரமங்களை கடந்துவந்தால் பள்ளியில் ஆசிரியர் இல்லை.
இந்தப் பிரச்னை தொடர்ந்து வந்த நிலையில்தான் உள்ளூரில் இருந்த சங்கர் சிங் என்ற சமூக செயற்பாட்டாளரிடம் சென்று சில மாணவிகள் முறையிடுகின்றனர். அவர் முதலில் பெற்றோர்களை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறார். பெரும்பாலும் தினக்கூலிகள் என்பதால் அது சாத்தியப்படாமல் போகிறது. அதன்பிறகுதான் மாணவிகளை வைத்து ஊர்வலம் நடத்தும் முடிவு எடுக்கப்படுகிறது.
பள்ளி முகப்பில் ஒன்று சேர்ந்த மாணவிகள் பள்ளிக்கூடத்தை இழுத்துப் பூட்டினார்கள். விதம் விதமான வாசகங்கள் அடங்கிய பேனர்களைப் பிடித்தபடி சாலையில் அணிவகுத்துச் செல்லத் துவங்கினார்கள்.
அவர்கள் மிகவும் ஒழுங்குடன் சாலையின் இருபுறமும் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் சென்றதால் எந்த போக்குவரத்துப் பிரச்னையும் எழவில்லை. காவல்துறையினர் கூட அவர்களைத் தடுக்கவில்லை.
பிம் நகரில் இருக்கும் பி.டி.ஓ. அலுவலகத்தில் சென்று மனு கொடுத்த மாணவிகள் அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
‘குறைந்தப்பட்சம் ஒரு பாடத்துக்கு ஒரு ஆசிரியராவது நியமியுங்கள்’ என்ற அவர்களின் கோரிக்கையை மறுத்து பேச யாராலும் முடியவில்லை. மாணவிகளின் போராட்ட செய்தி எங்கும் பரவி பெரும் கூட்டம் கூட ஆரம்பித்தது.
ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு நிர்வாகம் தள்ளப்பட்டது. மாவட்ட கலெக்டர் வந்தார். இன்னும் ஒரு வாரத்திற்குள் புவியியல், கணக்கு, இந்தி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்’ என்றார். ஆனால் இதை வெற்று உறுதிமொழியாக எடுத்துக்கொள்ள மாணவிகள் தயார் இல்லை. ‘அக்டோபர் 7-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இல்லை எனில் பள்ளியை இழுத்துப் பூட்டுவோம் ’ என்றனர்.
ஆனால் அக்டோபர் 7-ம் தேதி வரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 8-ம் தேதி சொன்னதுபோலவே பள்ளியை இழுத்து மூடிய மாணவிகள், பள்ளிக்கு வெளியில் ஒரு கூடாரம் அமைத்தனர். அங்கு மாணவிகள் தங்களுக்குத் தாங்களே சிறப்பு வகுப்புகள் நடத்திக்கொண்டனர். சாலையில் சென்ற எல்லோரது கண்களிலும் இந்தக் காட்சி தென்பட்டது. அருகில் இருந்த கடைக்காரர்கள் மாணவிகளுக்கு டீ, பிஸ்கட் வாங்கித் தந்தனர். இந்த செய்தி நகரம் எங்கும் பரவ எங்கும் இதேப் பேச்சு. கலெக்டர், முதலமைச்சர் என அனைவருக்கும் தகவல் சென்றது. ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு நிர்வாகம் தள்ளப்பட்டது. மாணவிகளோ, “ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரைக்கும் இப்படித்தான் வெளியில் அமர்ந்திருப்போம்” என்றனர் உறுதியான குரலில்.
அன்றே நான்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. அடுத்த நாள் பள்ளியின் காலை நேர ஒன்றுகூடலில் மொத்தம் ஏழு ஆசிரியர்கள் இருந்தனர். மாணவிகள் அத்தனை பேரின் முகங்களிலும் பெருமித மகிழ்ச்சி. தங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி, ஆசிரியர்கள் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி... என்று அன்றைய நாள் அந்த அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எங்கும் சந்தோஷம் பொங்கி வழிந்தது.
இதைவிட முக்கியமாக, இந்த பிம் நகர் பள்ளி மாணவிகளின் போராட்டம் ஒரு முன்னுதாரணமாக எங்கும் பரவியது. தெவைர், அவெட் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளும் இதே வழிமுறையைப் பின்பற்றி போராடத் தொடங்கிவிட்டார்கள்.
அரசு 'கல்வி உரிமை சட்டம்' கொண்டு வந்திருக்கிறது. ஆனால் அந்த சட்டம் ஆவணங்களில் மட்டும்தான் உரிமையை உத்தரவாதப்படுத்துகிறதே தவிர நடைமுறையில் அல்ல. நடைமுறையிலும் நமது கல்வி உரிமையை நிலைநாட்ட சட்டங்களை விட போராட்டங்கள்தான் உதவும் என்பதுதான் பிம் நகர் பள்ளி உணர்த்தும் பாடம்.

No comments:
Post a Comment