New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and Organisations covered under this Scheme - List of additional Hospitals covered under the Scheme based on the recommendations of the Accreditation Committee for empanelment of Hospitals - Approved - Orders issued. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 21, 2014

New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and Organisations covered under this Scheme - List of additional Hospitals covered under the Scheme based on the recommendations of the Accreditation Committee for empanelment of Hospitals - Approved - Orders issued.


காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளின் பட்டியலில் பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனையும் இடம்பெற்றுள்ளது. தனியார் மருத்துவமனைகளின் பட்டியலுடன் இந்த மருத்துவமனையும் இணைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவக்
காப்பீட்டுத் திட்டம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா நிறுவனத்தின் மூலமாக இந்தக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள், அவரது குடும்பத்தினர் ரூ.4 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெறலாம்.
மருத்துவமனைகள் பட்டியல்: அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் காப்பீட்டுத் திட்டத்தின் வழியாக தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை பெறலாம். எந்தெந்த மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெறலாம் என்பதை தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அந்தப் பட்டியலுடன் இப்போது 22 மருத்துவமனைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. அவ்வாறு சேர்க்கப்பட்டுள்ள பட்டியலில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனையும் இடம்பெற்றுள்ளது. தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த மருத்துவமனையானது, இப்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment