ஆன்–லைன் மூலம் வங்கி கணக்கில் இருந்து ஆசிரியையிடம் ரூ.45 ஆயிரம் சுருட்டல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 26, 2014

ஆன்–லைன் மூலம் வங்கி கணக்கில் இருந்து ஆசிரியையிடம் ரூ.45 ஆயிரம் சுருட்டல்

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் வசிப்பவர். மதுராந்தகத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு உள்ளது. அதன் ஏ.டி.எம். கார்டும் வைத்துள்ளார். நேற்று முன்தினம் மர்ம ஆசாமி ஒருவன் அனுராதாவிடம், செல்போனில் பேசினான். நான் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பேசுகிறேன், உங்களுக்கு ஆதார் அடையாள அட்டை உள்ளதா? என்று கேட்டான். ஆதார் அட்டை இல்லை என்று அனுராதா பதில் அளித்தார். உடனே அந்த ஆசாமி, உங்கள் வங்கி கணக்கில் ரூ.83 ஆயிரம்
பணம் இருக்கிறது. ஆதார் அட்டை இல்லாததால், உங்கள் வங்கி கணக்கு காலாவதி ஆகிவிடும், கணக்கை புதுப்பிக்க வேண்டும், அதற்கு ஏற்கனவே உங்கள் பெயரில் உள்ள வங்கி ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீட்டு எண் உள்ளிட்ட விவரங்களை சொல்லுங்கள் என்று அந்த ஆசாமி கேட்டான்.
ரூ.43 ஆயிரம் மோசடி
வங்கி கணக்கில் இருந்த தொகைபற்றி சரியான தகவலை சொன்னதால், அனுராதாவும், செல்போனில் பேசியவர் வங்கியில் இருந்துதான் பேசுகிறார் என்று நம்பினார். இதனால் தனது வங்கி ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீட்டு எண் உள்ளிட்ட விவரங்களை சொன்னார். உடனே அந்த ஆசாமி, போன் இணைப்பை துண்டித்துவிட்டான். ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் அவரது வங்கி ஏ.டி.எம். கணக்கில் இருந்து ரூ.43 ஆயிரம் பணம் ஆன்–லைன் மூலம் சுருட்டப்பட்டுவிட்டது.

No comments:

Post a Comment