ஆக்ஸ்போர்டு பேராசிரியருக்கு ‘சாஸ்த்ரா-ராமானுஜன் விருது’ - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 23, 2014

ஆக்ஸ்போர்டு பேராசிரியருக்கு ‘சாஸ்த்ரா-ராமானுஜன் விருது’

கும்பகோணம்: கணிதத்தில் சாதனைபுரிந்த 27 வயதேயான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் மெனார்டுக்கு ‘சாஸ்திரா- ராமானுஜம் விருது 2014’ மற்றும் 10 ஆயிரம் டாலர் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தின் சாதனைகளை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான டிசம்பர் 22ம் தேதி இளம் கணிதவியலாளருக்கு இந்த விருதை வழங்கி கவுரவிக்கிறது சாஸ்திரா
பல்கலைக்கழகம். கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான விருது, ஆக்ஸ்போடு பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., பட்டம் பெற்ற ஜேம்ஸ் மெனார்டுக்கு வழங்கப்பட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மங்கலம் ஸ்ரீனிவாசன் இவ்விருதை வழங்கினார்.
கணிதவியலாளர் ஜேம்ஸ் மெனார்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘பிரைம் நம்பர் தியரி’யில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். பிரபல பால் எர்டோஸின் ‘பிரைம் நம்பர்’களுக்கு இடையேயான ’லார்ஜ் கேப்ஸ் பிராப்ளம்’ ஜேம்ஸ் மெனார்டால் தீர்க்கப்பட்டது.
கணிதமேதை ராமானுஜத்தின் 127வது பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள சாஸ்திரா பல்கலையின் ஸ்ரீனிவாச ராமானுஜன் மையத்தில் ‘எண் தியரி’ குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment