மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 23, 2014

மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்!


பள்ளிகளுக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது.
ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், அரசுப்பள்ளிகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செயல்வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்ற பல்வேறு புதிய யுக்திகளையும் புகுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக அரசு முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தியது. இத்திட்டத்தின் படி, ஜூன் மாதம் முதல் செப்., வரை முதல் பருவம், அக்., முதல் டிச., வரை இரண்டாம் பருவமும், ஜன., முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என பிரிக்கப்பட்டு, புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன.

இத்திட்டம் கடந்த இரண்டு ஆண்டாக நடைமுறையில் உள்ளன. இதில், மாணவர்களுக்கு பற்றாக்குறை ஏற்படாத வகையில், புத்தகங்கள் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது., அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு மாணவர்கள் வரும் போது, மூன்றாம் பருவ புத்தகங்கள் அவர்களிடம் இருக்கும் வகையில் வினியோகிக்கப்படும். இவ்வாறு கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment