புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தோர் கவனத்துக்கு... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 22, 2014

புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தோர் கவனத்துக்கு...

 குடும்ப அட்டை கோரி மனு செய்தவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லையெனில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலக இ-மெயில் முகவரிக்கு கோரிக்கை அனுப்பலாம் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 
மேலும் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,           அலுவலர்களின் செல்லிடை பேசி மற்றும் இ-மெயில் முகவரிகள் இத்துறையின் இணைய தளத்தில் (www.consumer.tn.gov.in ) அளிக்கப்பட்டுள்ளது.   
          பொது விநியோகத் திட்டம் மற்றும் குடும்ப அட்டைத்தாரர்களின் குறைபாடுகளைக் களைவதற்கு, “குறைதீர் முகாம்கள் “குறைதீர் முகாம்கள்” சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், மாதந்தோறும் 2ம் சனிக்கிழமையன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாம்களில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்படும் குடும்ப அட்டை கோரும் மனுக்கள், அட்டைகளின் நகல் கோருதல், குடும்ப அட்டைகளில் உறுப்பினர்களின் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், எரிவாயு இணைப்புகள் மற்றும் இவை தொடர்பான திருத்தங்கள் குறித்த மனுக்கள் பிற்பகல் வரை பெறப்பட்டு, உரிய பரிசீலனைக்குப் பிறகு அன்று மாலைக்குள் அவற்றுக்கு தீர்வு காணப்படுகிறது. இக்குறைதீர் முகாம்களில் மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.   
           ஜூன் 2011 முதல் 13.12.2014 வரையில் இம்முகாம்களில் 3 இலட்சத்து 7 ஆயிரத்து 70 மனுதாரர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வகை குறைதீர் முகாம்களை நடத்தும் ஒரே இவ்வகை குறைதீர் முகாம்களை நடத்தும் ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான் என்று அமைச்சர் தெரிவித்தார்.   
            தமிழ்நாட்டில் 01.06.2011 முதல் 30.11.2014 வரை 11 இலட்சத்து 14 ஆயிரத்து 761 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், 3 இலட்சத்து 38 ஆயிரத்து 984 போலிக் குடும்ப அட்டைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment