தனித்தன்மையே ஒருவரின் வெற்றிக்கு ஆதாரம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 30, 2014

தனித்தன்மையே ஒருவரின் வெற்றிக்கு ஆதாரம்!

ஒருவர் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமெனில் தனித்தன்மை அவசியம். வேறு ஒருவரைப் போல் உருமாற முயன்று அதில் வெற்றி பெற்றவர்கள் இதுவரை யாரும் இல்லை. தனித்தன்மையே ஒருவரின் வெற்றிக்கு ஆதாரம்.
அசைக்க முடியாத தனித்தன்மை, சுயமாகச் சிந்திக்கும் துணிவு, தனக்கென்ற தனிப்பட்ட பாணியை வகுத்துக்கொள்ளும் திறமை, சுயத்தை இழக்காமல் இருக்கும் தைரியம், யாரோ ஒருவரின் முகமூடியாக மாறாமல் இருப்பது, இவைதான் ஒருவருக்கு வெற்றி தேடித் தருபவை.
உடை, நடை, செயல் என அனைத்திலும் தனித்தன்மையோடு இருந்தால் உலகம் உங்களைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கும்.
எம்.ஜி.ஆர்., கருப்புக் கண்ணாடி அணிந்து தலையில் வெள்ளைத் தொப்பியுடனும், தூய வெள்ளை உடையுடனும் இறுதிவரை காட்சியளித்தார். அவர் எங்கே சென்றாலும், இந்தப் பாணியில் செல்வதுதான் வழக்கம்.

இதன்மூலம் மக்களை எளிதாகக் கவர்ந்தார். இதுபோல நீங்களும் ஒரு பாணியை வகுத்துக்கொண்டு தனித்தன்மையோடு இருக்க முயற்சிக்க வேண்டும்.
தன்னம்பிக்கை இல்லாதவர், நான் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டால் என்னை விமர்சனம் பண்ணுவார்களா? நான் அந்த உடையைப் போட்டுக் கொண்டால் என்னைத் திட்டுவார்களா? என தனக்குத்தானே எண்ணிக்கொண்டு எதையும் செய்யாமல் இருப்பார்கள்.
இப்படியில்லாமல், நம் விருப்பம்போல வாழ்க்கை இருக்க வேண்டும். மாவீரர்களாக திகழ்ந்த அலெக்சாண்டர், நெப்போலியன் ஆகியோரது வெற்றிக்கு அவர்கள் மற்றவர்களின் பாணியைப் பின்பற்றாமல் தனித்தன்மையோடு விளங்கியதே காரணம்

No comments:

Post a Comment