ராஜஸ்தானில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட கல்வித் தகுதி கட்டாயம்: அரசு அதிரடி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, December 21, 2014

ராஜஸ்தானில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட கல்வித் தகுதி கட்டாயம்: அரசு அதிரடி


பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் குறைந்த அளவு கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில அரசு பஞ்சாயத்து அவசர சட்டம் 2014-ல் இரண்டாவது திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது.
அதில், ஷிலா பரிசத் அல்லது பஞ்சாயத் சமிதி தேர்தலில் போட்டியிட குறைந்தது 10-ம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும். சர்பாஞ்ச் தேர்தலில் போட்டியிட குறைந்தது 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், தனித்தொகுதியில் போட்டியிடுபவர்கள் 5-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சட்டத்திற்கு கவர்னர் கல்யாண் சிங் நேற்று அனுமதி அளித்தார்.
இதனால் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆகவே, அடுத்த மாதம் ராஜஸ்தானில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் கட்டாயம் கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். இல்லையேனில் தேர்தலில் போட்டியிட முடியாது.

No comments:

Post a Comment