குறைகளை சரிசெய்ய பல்கலைகளுக்கு 1 ஆண்டு மட்டுமே இறுதிக்கெடு: யு.ஜி.சி. எச்சரிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 19, 2015

குறைகளை சரிசெய்ய பல்கலைகளுக்கு 1 ஆண்டு மட்டுமே இறுதிக்கெடு: யு.ஜி.சி. எச்சரிக்கை

தமிழகத்தின் 4 நிகர்நிலைப் பல்கலைகள் உட்பட, நாட்டின் 7 நிகர்நிலைப் பல்கலைகள், ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை 1 ஆண்டிற்குள் சரிசெய்யவில்லை எனில், நிகர்நிலைப் பல்கலை என்ற அந்தஸ்தை இழக்க வேண்டியிருக்கும் என யு.ஜி.சி. எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக யு.ஜி.சி. தரப்பில் கூறப்படுவதாவது: மேற்கண்ட நிகர்நிலைப் பல்கலைகள், தங்களின் குறைகளை பல ஆண்டுகளாக சரிசெய்து கொள்ளவில்லை. அக்கல்வி நிறுவனங்களிலுள்ள பெரியளவிலான குறைபாடுகள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படுவதுடன், மத்திய மனிதவள அமைச்சகத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் கொண்டு செல்லப்படும்.

பல்கலை ஆய்வு தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை முழுமையாக ஆய்வுசெய்த பிறகு, இறுதியாக, குறிப்பிட்ட 7 நிகர்நிலைப் பல்கலைகளுக்கு, தங்களின் குறைகளை சரிசெய்துகொள்ள, அதிகபட்சம் 1 ஆண்டுகாலம் மட்டுமே அவகாசம் அளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. இது, இறுதி கெடுவாகும்.

அந்த காலக்கெடுவுக்குள், அந்தப் பல்கலைகள், தங்களது குறைகளை சரிசெய்து கொண்டு, அதற்கான அறிக்கையை சமர்ப்பித்துவிட வேண்டும். இல்லையெனில், அவைகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என்ற அந்தஸ்தை இழக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment