கட்டணம் செலுத்தாத 250 மாணவர்களை அறையில் பூட்டி வைத்து பள்ளி நிர்வாகம் தண்டனை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, February 6, 2015

கட்டணம் செலுத்தாத 250 மாணவர்களை அறையில் பூட்டி வைத்து பள்ளி நிர்வாகம் தண்டனை

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியில் கட்டணம் செலுத்தாத 250 மாணவர்களை அறையில் பூட்டி வைத்து பள்ளி நிர்வாகம் தண்டனை வழங்கியுள்ளது. மாணவர்களில் 8 வயதுடையவர்களும் அடங்கும். மாணவர்களுக்கு குடிநீர்கூட வழங்கப்படவில்லை, இச்சம்பவத்தினால் இரண்டு மாணவர்கள் மயக்கம் அடைந்தார்கள், இச்சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றுள்ளது. மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மெடிக்கல் காலேஜ் போலீஸ் நிலையத்தில் பள்ளி முதல்வர் அப்துல் ரகுமான் மற்றும் துணைத் தலைவர் கிரிஜாசுரேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 8 வயது மாணவி இஷா பாத்திமா பேசுகையில், “நாங்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அறைக்குள் கடும் வெப்பம் நிலவியது மற்றும் எங்களுக்கு குடிக்க குடிநீர்கூட தர மறுக்கப்பட்டது. எங்களை அடைத்து வைக்கப்பட்டு இருந்த அறையில் உட்காரவும் இடமில்லை, நாங்கள் இதுதொடர்பாக நிர்வாகத்திடம் புகார் அளித்தபோது, ஒருவர் மடிமீது ஒருவர் மீது அமர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினர்.” என்று கூறினார். திருவனந்தபுரத்தை தலைமையமாக கொண்ட மனருல் ஹுதா அறக்கட்டளை சார்பில் பள்ளி நடத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதமே பள்ளியின் சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் காலாவாதியாகிவிட்டது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் கிழமை பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வெளியே ஒரு மணிநேரம் நிறித்தி வைக்கப்பட்டு இருந்தனர். இதுதொடர்பாக விசாரிக்க கடந்த செவ்வாய் அன்று சில பெற்றோர்கள் பள்ளிக்கு சென்றனர். இதுதொடர்பாக பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஹதாமுல் நஜு பேசுகையில், “மாண வர்கள் பள்ளி வகுப்பறையில் இருப்பதாக பள்ளி முதல்வர் தெரிவித்தார். ஆனால், ஏராளமான மாணவர்கள் பள்ளிக்கு முன் இருக்கும் கருத்தரங்கக் கூடத்தில் அடைக்கப் பட்டிருந்தனர்” என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டை பள்ளிநிர்வாகம் மறுத்திவிட்டது.
இதுதொடர்பாக பள்ளியின் இயக்குநர் டி.எம். அபுபக்கர் பேசுகையில், “கட்டணம் செலுத்தாத மாணவர்களை கருத்தரங்கு மன்றத்தில் கூட பள்ளி முதல்வர் கேட்டுக் கொண்டார். பள்ளி முதல்வர் கட்டணம் செலுத்தாத மாணவர்களிடம் பேசவிருந்தநிலையில், சிலபெற்றோர்கள் பள்ளி மூடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டம் நடத்தத் தொடங்கினர்” என்று கூறினார். இச்சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கேரள மாநில குழந்தைகள் நலஉரிமை ஆணையம் மாவட்ட காவல்துறையைக் கேட்டுக் கொண்டுள்ளது. கோபம் அடைந்துள்ள மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment