வேப்பிலையின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, February 10, 2015

வேப்பிலையின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

வேப்பின் பல
பயன்களை பற்றி அறிந்திருப்போம்.
வேப்பிலையை வேறு எந்த
மாதிரி எல்லாம் உபயோகப்படுத்தலாம்
என இங்கே பார்க்கலாம். பித்த
பிரச்சனை மற்றும் கிருமியால்
அவதி படுபவர்கள் வேப்பம்பூவை ரசம்
வைத்து சாப்பிடுவது மிகவும்
நல்லது. அவ்வாறு சாப்பிட்டால்
உடலில் ஏற்படும் அதிகப்படியான
பித்தம் குறைகிந்துவிடும். உடலில்
உள்ள ஒரு சிறு கிருமிகளும்
அழிந்து விடும்.
வேப்பம்
பூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள்
தூளுடன் கலந்து தேய்த்துக்
குளித்து வந்தால் தோல்
வியாதி நீங்கிவிடும். அந்த
பொடியை தணலில்
போட்டு வீடு முழுவதும்
புகையை பரவ விட்டால்
விஷப்பூச்சிகள், கொசு,
மூட்டைபூச்சி தொல்லைகள்
ஓழிந்துவிடும். தினமும் வேப்ப
இலைகளை நீரில்
போட்டு வைத்து விட்டு ஒரிரு மணி நேரம்
கழித்து குளிக்க தோல்
வியாதியே வராமல் இருக்கும். வேப்ப
இலை கொத்துகள் நான்கை எடுத்து
தண்டு மட்டும் வெண்ணீரில்
படுமாறு செய்து கால்மணி நேரம்
ஊறவையுங்கள். பிறகு அந்த
சாற்றை இரண்டு நாட்கள் குடித்து வர
வயிற்று எரிச்சல் நிற்கும்.
வேப்பிலை சாற்றை எடுத்து மோருடன்
கலந்து சாப்பிட வயிற்று பூச்சிகள்
ஓழியும். வேப்பம் பூவை லேசாக
வாட்டி தலையில் கட்டிக் கொண்டால்
பேன், பொடுகு,
ஈறு போன்றவை அகன்று விடும்.
வேப்பிலைக் கொழுந்தை தினமும்
பச்சையாகச்
சிறிதளவு மென்று வந்தால்
வயிறு சம்பந்தமான தொல்லைகள்
வரவே வராது. வேப்பிலைக்
கொழுந்தை இடித்து சாறு பிழிந்து அதில்
சிறிது தேனைச்
சேர்த்து இரவு உணவுக்குப் பின்
சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள
பூச்சிகள்
இறந்தோ உயிருடனோ உடலை விட்டு வெளியேறிவிடும்.
வேப்பங்கொழுந்தை பசு மோர்
விட்டு அரைத்து தீப்பட்ட புண்ணில்
பூசினால் சீக்கிரம் காயம் ஆறும்.
வேப்பங்கொழுந்து இலையை அரைத்து ஒரு
கோலி அளவு எருமை தயிரில்
மூன்று நாட்கள் உள்ளுக்குள்
உட்கொண்டு வந்தால்தொண்டைக்கறமல்
குணமாகும். வேப்பம் பூ, மிளகு,
இவை இரண்டையும்
சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வந்தால்
கர்ப்பப்பை கோளாறு நீங்கும்.
வேப்பிலையை தண்ணீருடன்
சேர்த்து கொதிக்க வைத்து அந்த
நீரில் முகம் கழுகி வந்தால் முகம்
பளபளப்பு அடையும்.
மழைக்காலங்களில் ஈக்கள்
தொல்லை அதிகமாகும்.
ஈக்கள் தொல்லையை விரட்ட
வேப்பிலையை கசக்கி டைனிங்டேபிளில்
வைத்து விட்டால் ஈக்கள் வராது.மாத
விலக்கின் போது வயிற்றுவலியால்
அவதிப்படுபவர்கள் 3
கொத்து வேப்பிலையை எடுத்து தண்ணீரில்
கொதிக்க வைத்து கொதிக்கும்
முன்னர் மஞ்சள் சேர்த்து குடித்தால்
வயிற்று வலி குணமாகும்.
தலையில் நீர்
கோர்த்து தலைவலியால்
அவதி படுபவர்கள் இந்த
வேப்பிலை மஞ்சளை நன்கு கொதிக்க
வைத்து ஆவிபிடித்தால்
தலைவலி குணமாகும்.

No comments:

Post a Comment