புளூ பிரின்ட்டில் இல்லாத கேள்விகள் : எஸ்எஸ்எல்சி திருப்புதல் தேர்வில் குழப்பம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 12, 2015

புளூ பிரின்ட்டில் இல்லாத கேள்விகள் : எஸ்எஸ்எல்சி திருப்புதல் தேர்வில் குழப்பம்

திருப்புதல் தேர்வில் புளூ பிரின் ட்டில் (திட்ட வரைவு) இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதால் 10ம் வகுப்பு மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

               மதுரை மண்டல அளவில் கடந்த 10ம் தேதி முதல் எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு 2ம் திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர்கள் இத்தேர்வை எழுதி வருகின்றனர். தமிழ் வினாத்தாளில் கேள்விகள், புளூ பிரின்ட் அடிப்படையில் கேட்கப்படவில்லை. புளூ பிரின்ட் படி 45வது வினா விற்கு பாடலை படித்து விடையளிக்க வேண்டும். இதில் 4, 6, 9, 10 ஆகிய ஏதே னும் ஒரு பிரிவில் இருந்து ஒரு பாடல் கொடுத்து 5 வினாக்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பிரிவு 7ல் இருந்து வினா கேட்கப்பட்டுள்ளது.

வினா எண் 47ல் 10 வரிகளுக்கு மிகாமல் பதிலளிக்க வேண்டிய நெடு வினா இடம் பெறும். இதில் செய்யுள் பகுதியில் முதல் 4 பிரிவில் இருந்து ஒரு வினாவும், அடுத்த 5 பிரிவில் இருந்து ஒரு வினாவும் இடம் பெறவேண்டும். 2 கேள்விகளில் ஏதேனும் ஒன்றை எழுதும் முறையில் அமைக்கப்பட் டிருக்கும். ஆனால் இம்மு றை பிரிவு ஒன்றில் இருந்தும், பிரிவு மூன்றில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்றுள்ளன.

இதேபோல் குறு வினாக் கள், சிறு வினாக்களில் சிலவும் புளூ பிரின்ட்படி இல்லை. சமச்சீர் பாடத்திட்டத்தில் புளூ பிரின்ட் அடிப்படையில் வினாத்தாள் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் மாற்றப்பட்டிருப்பதால் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் குழப்பமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மெல்ல கற்கும் மாணவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச்செயலர் இளங்கோ கூறுகையில், “தமிழ் வினாத் தாள் புளூ பிரின்ட் படி கேட்கப்படுவதில்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் பாடத்தில் ஏராளமான மாணவர்கள் தோல்வியடைகின்றனர். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மெல்ல கற்கும் மாணவர்கள் ஆகியோருக்கு புளூ பிரின்ட் படியே பாடம் நடத்தப்படுகிறது. எனவே திருப்பதல் தேர்வு, பொதுத்தேர்வு ஆகியவற்றில் புளூ பிரின்ட் அடிப்படையிலயே வினாத்தாள் அமைக்க வேண்டும்,” என்றார்.

No comments:

Post a Comment