பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவங்கியது: 6 லட்சம் பேர் பங்கேற்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 5, 2015

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவங்கியது: 6 லட்சம் பேர் பங்கேற்பு

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று காலை துவங்கியது. சுமார் 6 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்கின்றனர்.பிளஸ் 2 தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்குகிறது. கடந்தாண்டை போலவே இந்தாண்டும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாட பிரிவுகளான இயற்பியல், வேதியியல், உயிரியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களை எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கட்டாயம். இதில், 50 மதிப்பெண் செய்முறை தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வுக்கு 150 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், அறிவியல் பாட பிரிவை சேர்ந்த மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும். இன்று தொடங்கிய செய்முறை தேர்வில், சுமார் 6 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். காலை, மாலை என இரு பிரிவுகளாக செய்முறை தேர்வு நடக்கிறது. இதில் ஒரு குழுவில் 20 பேர் என மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு தேர்வில் பங்கேற்பர். செய்முறை தேர்வுக்கள் 3 ஆயிரம் தேர்வு மையங்களில் நடக்கிறது. சென்னையில் 229 தேர்வு மையங்களில் நடக்கிறது.
அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அதிகாரி நேரடியாக சென்று தேர்வு மையங்களை ஆய்வு செய்கின்றனர். பள்ளி கல்வி துறையில் பணியாற்றும் இணை இயக்குனர்கள், மாவட்டம் தோறும் தேர்வு பணிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செய்முறை தேர்வு வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. மாவட்ட வாரியாக தேர்வுக்கான தேதிகள் வேறுபடும்.

No comments:

Post a Comment