இந்தியா ஏழை நாடுதான்: ஆனால்... கருப்புப் பணப் பட்டியலில் முன்னணி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 9, 2015

இந்தியா ஏழை நாடுதான்: ஆனால்... கருப்புப் பணப் பட்டியலில் முன்னணி

உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இன்னும் கழிவறை வசதி கூட இல்லாத எத்தனையோ கிராமங்கள் இருக்கும் இந்தியா இன்னமும் ஏழை நாடுதான் என்று நாம் தான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், 4.1 பில்லியன் டாலர் என்ற மதிப்புடன் இந்தியா கருப்புப் பண பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது.
உலகில் சுமார் 200 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா 16வது இடத்தைப் பிடித்திருப்பது இந்தியர்கள் உட்பட பலரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, வெனிசுலா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
இது கடந்த 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் எச்எஸ்பிசியில் கணக்கு வைத்திருந்தவர்களை அடிப்படையாக தயாரிக்கப்பட்ட பட்டியல் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment