காரைக்​கு​டி​யில் பிப்.​ 13 இல் புத்​த​கத் திரு​விழா தொடக்​கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 11, 2015

காரைக்​கு​டி​யில் பிப்.​ 13 இல் புத்​த​கத் திரு​விழா தொடக்​கம்


சிவ​கங்கை மாவட்​டம் காரைக்​கு​டி​யில் மாநில அள​வி​லான புத்​த​கத் திரு​விழா கம்​பன் மணி​மண்​ட​பத்​தில் வரும் வெள்​ளிக்​கி​ழமை ​(பிப்.​ 13) தொடங்கி 22-ஆம் தேதி வரை நடை​பெ​று​கி​றது.​
இது​கு​றித்து காரைக்​கு​டிப் புத்​த​கத் திரு​விழா குழுத் தலை​வர் பேரா​சி​ரி​யர் அய்க்​கண் செவ்​வாய்க்​கி​ழமை செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​ய​தா​வது:​ 13-ஆவது ஆண்டு புத்​த​கத் திரு விழா வரும் 13-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடை​பெ​ற​வுள்​ளது.​ ஆண்​டு​தோ​றும் 40 ஆயி​ரம் மக்​கள் இந்​தப் புத்​த​கத் 
திரு​வி​ழாவை காண வரு​கை​தந்து புத்​த​கங்​க​ளைக் குறைந்த விலை​யில்   வாங்​கிப் பய​ன​டை​கின்​ற​னர்.​
சென்னை,​​ கோவை,​​ மதுரை,​​ சேலம்,​​ திருச்சி உள்​ளிட்ட பல்​வேறு  நக​ரங்​களி​லி​ருந்து முன்​னணி பதிப்​ப​கத்​தார் பங்​கேற்​கின்​ற​னர்.​ சுமார் 50 அரங்​கு​கள் வரை அமைக்​கப்​ப​டு​கின்​றன.​ தின​மும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை​யும்,​​ சனி மற்​றும் ஞாயிற்​றுக்​கி​ழ​மை​க​ளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை​யும் புத்​த​கங்​களை பார்​வை​யி​ட​லாம்.​
தின​மும் காலை​யில் பள்ளி,​​ கல்​லூரி மாண​வர்​க​ளது படைப்​பாற்​றல்,​​ இலக்​கி​யப்​போட்​டி​கள் நடத்​தப்​ப​டும்.​ பொது​மக்​க​ளுக்கு விநாடி-​வினா போட்​டி​கள் நடத்​தப்​ப​டும்.​
போட்​டி​க​ளில் வெல்​வோ​ருக்கு புத்​த​கங்​களை பரி​சாக வழங்​கு​கி​றோம்.​ கடந்த ஆண்டு இது​போன்று சுமார் ரூ.​ 60 ஆயி​ரம் மதிப்​புள்ள புத்​த​கங்​கள் பரி​சாக வழங்​கப்​பட்​டது.​ மேலும் மாலை நேரங்​க​ளில் 2 பள்​ளி​க​ளைச்​சேர்ந்த மாணவ,​​ மாண​வி​க​ளின் கலை​நி​கழ்ச்​சி​க​ளும் நடை​பெ​றும்.​
துவக்க விழா​வில்,​​ குன்​றக்​குடி பொன்​னம்​பல அடி​க​ளார் ஆசி​யுரை வழங்​கு​கி​றார்.​ இலக்​கி​யப் பேச்​சா​ளர் நாஞ்​சில் சம்​பத் தொடக்​கி​வைத்​துப் பேசு​கி​றார்.​ விழா​விற்​கான ஏற்​பா​டு​களை காரைக்​குடி புத்​த​கத்​தி​ரு​விழா குழு​வி​னர் செய்து வரு​கின்​ற​னர் என்​றார்.​

No comments:

Post a Comment