மாணவியருக்கு ஆர்வமுடன் பாடம் கற்பிக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியைகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, February 13, 2015

மாணவியருக்கு ஆர்வமுடன் பாடம் கற்பிக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியைகள்

வால்பாறை மலைப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில், உடல் குறைகளை தாண்டி, மாற்றுத்திறனாளி ஆசிரியைகள், மாணவியருக்கு பாடம் கற்றுத்தருகின்றனர்.

வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 695 மாணவியர் படிக்கின்றனர். இங்கு, கடந்த ஆண்டு, பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு, புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

கோவை பூமார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் அனிதா. முதுகலை பட்டதாரியான இவர் கடந்த ஆண்டு, இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.  இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையில், படியில் தவழ்ந்த நிலையில் தான், பள்ளிக்கு சென்று வருகிறார்.

மற்றொருவர், கோவை ஒண்டிப்புதுரை சேர்ந்த ஸ்ரீதேவி. பட்டதாரி ஆசிரியரான இவரும், ஆங்கில பாடம் நடத்துகிறார். பார்வை இழந்த நிலையிலும், ’பிரையில்’ முறையில், பாடங்களை மாணவியருக்கு சொல்லித்தருகிறார். உதவியாளர் ஒருவரின் மூலம், மாணவியர் எழுதிய தேர்வுகளை திருத்துகிறார். எளிதில் புரியும் வகையில் அவரே பாடம் நடத்துகிறார்.

கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆசிரியைகள் இருவரும், இந்த கல்வியாண்டில், மாணவியர், நூறு சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment