முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுகள்: மார்ச் 1 முதல் புதிய விதி அமல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 24, 2016

முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுகள்: மார்ச் 1 முதல் புதிய விதி அமல்

மார்ச் 1-ம் தேதி முதல் 199 கி.மீ தூரத்துக்கான முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுகள் 3 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் புதனன்று கேள்வி நேரத்தின் போது, இந்த புதிய விதி குறித்து ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

முன்பதிவு இல்லாமல் 199 கி.மீ தூரம் வரை பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட்டுகள், 3 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லும். இந்த புதிய விதி வரும் மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இதே தூரத்துக்கு ரிட்டன் டிக்கெட்டுகளும் வழங்கப்பட மாட்டாது. காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 29 ரயில் நிலையங்களில் நடைமேடை (பிளாட்ஃபார்ம்) டிக்கெட்டுகள் மொபைல் போன்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment