பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு கடும் சட்டம் தேவை! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, February 23, 2016

பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு கடும் சட்டம் தேவை!

மாநகரங்களின் பிரச்னைகளில் மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது, பயன்படுத்தப்பட்டு துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள். அவை, நிலத்தடி நீரையும், உயிர்ச்சூழலையும் ஒவ்வொரு நாளும் காவு வாங்கி கொண்டிருக்கிறது என்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

பிளாஸ்டிக் உபயோகத்தை முடிந்தளவு குறைப்பது, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்வது உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டி வருகின்றனர், சென்னை ட்ரெக்கிங் கிளப் உறுப்பினர்கள். அந்த சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான, ரா.அரவிந்த், 29; கூறியதாவது: சென்னை ட்ரெக்கிங் கிளப், பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. அவற்றில், ஒன்றுதான், நீர்நிலைகள், கடற்கரையை துாய்மைப்படுத்துவது; ஒவ்வொரு ஆண்டும் பல துாய்மை பணிகளை செய்தாலும், ஜூனில் மட்டும் ஒருங்கிணைந்த, மிகப்பெரிய அளவிலான துாய்மைப்பணியை மேற்கொள்கிறது.காரணம், அந்த மாதத்தில், உலக சுற்றுச்சூழல் தினம்; கடல் பாதுகாப்பு தினம் ஆகிய முக்கிய தினங்கள் அடுத்தடுத்து வருவது தான். துாய்மை பணியில், கடற்கரை, முகத்துவாரங்களில் அதிக பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து, அங்குள்ள உயிர்ச்சூழலை பாதிக்கின்றன.
கடந்த நவம்பர், டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தில், எல்லா கால்வாய்களையும் நிறைத்து, நீரை பக்கவாட்டில் பெருக்கெடுக்க காரணமாக இருந்தவை, பிளாஸ்டிக் கழிவுகள். அதற்கு மிக முக்கிய காரணம், பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய கடுமையான சட்டங்கள் இல்லாததே. குறிப்பாக, பிளாஸ்டிக் பைகள் உபயோகத்திற்கு முரண்பட்ட சட்டங்கள் உள்ளன. உற்பத்திக்கும் விற்பனைக்கும் தடையில்லாமல், வாங்குவோரிடம் பணம் வசூலிப்பதால், என்ன நன்மை விளைந்துவிடப்போகிறது. ஒருவர் ஒரு நாளைக்கு மூன்று வேளை தேனீர் அருந்துவதாக வைத்துக்கொள்வோம். காகிதம் அல்லது பிளாஸ்டிக் டம்ளரில் தேனீர் அருந்துகிறார் என்றால், அவர் மாதத்திற்கு, 90க்கும் அதிகமான டம்ளர்களை பயன்படுத்துகிறார். அப்படி என்றால், ஒரு நிறுவனத்தில், குறைந்தபட்சம் நுாறு பேர் பணிபுரிவதாக எடுத்துக்கொண்டால், 900 டம்ளர்களையும், ஆண்டுக்கு, 1,08,000 டம்ளர்களையும் பயன்படுத்துகின்றனர்.
சென்னையில் உள்ள நிறுவனங்களை கணக்குப்போட்டால், எத்தனை கோடி தேனீர் கோப்பைகள் மட்டும் மண்ணுக்கு செல்கின்றன. இப்படியே, தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள், கேரி பைகள், பார்சல் பிளாஸ்டிக்குகள் என்று, அன்றாட தேவைக்காக நாம் பயன்படுத்தும் எத்தனையோ பிளாஸ்டிக் பொருட்கள் கடைசியாக, குப்பைக்கிடங்கிற்கோ, நீர்வழிகள் மூலம், கடலுக்கோ தான் செல்கின்றன. பசுக்கள், நாய்கள் உள்ளிட்ட எண்ணற்ற கால்நடைகள், அவற்றை உண்டு செரிக்க முடியாமல், இறக்கின்றன. இறந்த உயிர்களை உண்ணும் மற்ற விலங்குகளின் வயிற்றுக்குள்ளும் அவை செல்கின்றன. அதே போல் தான், கடலிலும் நடைபெற்று, நாளுக்கு நாள் லட்சக்கணக்கான உயிரினங்கள் மடிந்து கொண்டிருக்கின்றன.
குப்பைக்கிடங்குகளில் இருந்து வெளியேறும் இதன் நச்சுப்பொருட்கள், நிலத்தடி நீருடன் கலந்து, அதை பயன்படுத்துவோருக்கு, புற்றுநோய் உள்ளிட்ட கொடுமையான நோய்கள் உண்டாகின்றன. நாங்கள் சேகரிக்கும் குப்பையில் உள்ள கண்ணாடி, பிளாஸ்டிக்கை, மறுசுழற்சிக்கு அனுப்பி விடுகிறோம். குப்பைகளை தரம்பிரித்து மறுசுழற்சி செய்வதில், பல ஊராட்சிகளும் நகராட்சிகளும் வெற்றிகரமாக செயல்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

கடந்த 2015, ஜூன் 7ம்தேதி, கடற்கரை துாய்மைப்பணியில் சேகரித்த குப்பையை தரம்பிரித்து, மறுசுழற்சி செய்த விவரம்:
பொருள்கிலோவில்
காகிதம்1,325
பிளாஸ்டிக்2450
பாட்டில்2650
நைலான்417
ரப்பர்654
தெர்மாகோல்227
அலுமினியம்126

- நமது நிருபர் -

No comments:

Post a Comment