5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 24, 2016

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய பென் ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஜாக்டா கூட்ட மைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங் களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டா) சார்பில் 500-க்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் நேற்று காலை 11 மணியளவில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டனர். ஜாக்டா ஒருங்கி ணைப்பாளர் பி.கே.இளமாறன் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷமிட்டவாறு ஆசிரியர் கள் டிபிஐ வளாகத்தில் பேரணியாக சென்றனர்.

முன்னதாக ஜாக்டா ஒருங்கி ணைப்பாளர் இளமாறன் நிருபர் களிடம் கூறியதாவது: 18 ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த ஜாக்டா கூட்ட மைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம். கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அரசுடன் நடந்த பேச்சுவார்த் தையால் எந்த பலனும் இல்லை. புதிய பென்ஷன் திட்டம் ரத்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இடமாறுதலுக்கு மாவட்ட அளவில் கலந்தாய்வு, தையல், நெசவு, விவசாயம் உள்ளிட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட எங்களின் கோரிக்கைகளை நிறை வேற்றுவது தொடர்பாக முதல்வர் ஜாக்டா நிர்வாகிகளை அழைத்துப் பேச வேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும்.

இவ்வாறு இளமாறன் கூறினார்.

ஜாக்டா முற்றுகைப் போராட் டத்தை முன்னிட்டு டிபிஐ வளாகத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். டிபிஐயின் அனைத்து நுழைவு வாயில்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment