இரவில் தூங்கி கொண்டு பயணம் செய்யும் ரெயில் பயணிகளை எழுப்பிவிட எஸ்.எம்.எஸ். சேவை: பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, February 23, 2016

இரவில் தூங்கி கொண்டு பயணம் செய்யும் ரெயில் பயணிகளை எழுப்பிவிட எஸ்.எம்.எஸ். சேவை: பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது

மத்திய ரெயில்வே பட்ஜெட் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.அப்போது பயணிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகள், சலுகைகளை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரெயில் பயணத்துக்கு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். சேவையை அதிகபடுத்த திட்டமிட்டுள்ளனர். குறிப் பிட்ட ரெயில் எந்த பிளாட்பாரத்துக்கு எத்தனை மணிக்கு வரும் அல்லது புறப்படும் என்ற தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளது.பயணிகள் முன்பதிவு செய்யும் போது கொடுக்கும் செல்போன் நம்பரை பயன்படுத்தி இந்த எஸ்.எம்.எஸ். சேவை வழங்கப்படும் என்று ரெயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரெயில்கள் தாமதமாவது பற்றியும் தெரிவிக்க முடிவு செய்துள்ளனர்.நீண்ட தூரம் செல்லும் ராஜ்தானி, தோரந்தோ, சம்பர்க்கிராந்தி உள்பட அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் இரவில் தூங்கிக் கொண்டு செல்லும் பயணிகளுக்கும் எஸ்.எம்.எஸ். சேவை மூலம் உதவிகள் செய்ய ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.அதன்படி இரவு 11 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பயணிகள் இறங்கும் இடத்தை நெருங்கும் முன்பு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவித்து எழுப்பி விட திட்டமிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வர உள்ளது.

No comments:

Post a Comment