முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவராக தேர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 24, 2016

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவராக தேர்வு

தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவராக பதவி வகித்து வந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அதன்பின்பு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய மனித உரிமைகள் கமிஷனுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான குழு கூட்டம் நேற்று டெல்லியில் கூடியது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், டெல்லி மேல்-சபை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தேசிய மனித உரிமை கவுன்சில் தலைவராக எச்.எல் தத்து நியமனம் செய்வதற்கான முடிவுக்கு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மக்களவையின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொள்ளவில்லை. குழு கூட்டத்தின் இந்த முடிவு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பட்டு அவர் அனுமதி அளித்த பிறகே எச்.எல். தத்து தேசிய மனித உரிமை கவுன்சில் தலைவராக நியமிக்கப்படுவார்.
65 வயதான எச்.எல். தத்து கடந்த டிசம்பர்  2 ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். தேசிய மனித உரிமை கவுன்சில் தலைவராக நியமிக்கப்படும் எச்.எல்.தத்து அந்த பதவியில் 5 ஆண்டுகள் நீடிப்பார்.

No comments:

Post a Comment