நாளை ரெயில்வே பட்ஜெட்: பயணிகள் ரெயில் கட்டணம் உயர்கிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 24, 2016

நாளை ரெயில்வே பட்ஜெட்: பயணிகள் ரெயில் கட்டணம் உயர்கிறது

ரெயில்வே பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் பயணிகள் கட்டணம் உயர்கிறது.பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதலாவது கூட்டம் என்பதால் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார்.பாராளுமன்றத்தில் நாளை (24–ந்தேதி) ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அப்போது புதிய ரெயில்கள், திட்டங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறார். பிரதமர் மோடியின் கனவு திட்டமான அதிவேக புல்லட் ரெயில் விடுவது பற்றி ஏற்கனவே அறிவிக்கப்பட்டாலும் அதற்கான செயல் வடிவம் குறித்த அறிவிப்புகளை வெளியிடுகிறார்.பயணிகள் ரெயில் கட்டணமும் உயர்த்தப்படக் கூடும் என்று தெரிகிறது. ரெயில்வேயில் ரூ. 1,41,416 கோடி வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 1,36,079 கோடிதான் வருமானம் ஈட்டியது. 3.77 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரூ.32 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சரிசெய்ய பயணிகள் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.ரெயில்வேயில் 7–வது சம்பள கமிஷனை அமல்படுத்தும்போது சம்பள உயர்வு, நிலுவைத் தொகை வழங்க வேண்டி இருப்பதால் ஏற்படும் நிதிச்சுமையை சமாளிக்கவும், ரெயில்வேயில் பல புதிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டி இருப்பதால் ரெயில் கட்டண உயர்வு மூலம்தான் அதை சரிசெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.ரெயில் கட்டணத்தை உயர்த்தாமல் நிர்வாக குளறுபடிகளை சரி செய்து வருமான இழப்பை சரிக்கட்டும் வழிமுறைகளை காணுமாறு கடந்த நவம்பர் மாதமே ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு ரெயில்வே போர்டுக்கு உத்தரவிட்டு இருந்தார்.என்றாலும் இதன் மூலம் வருமான இழப்பை சரிக்கட்ட முடியாது என்றும் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகவே கருதப்படுகிறது.தற்போது முக்கிய வழித்தடங்களில் கூடுதல் கட்டணத்துடன் சுவிதா சிறப்பு ரெயில் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதை மேலும் பல வழித்தடங்களில் அறிமுகப்படுத்தவும், கூடுதல் கட்டணத்துடன் பல சிறப்பு ரெயில்களை விடவும் ரெயில்வே முடிவு செய்துள்ளது.ரெயில்வே திட்டங்களை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்துவது பற்றியும் அறிவிப்பு வெளியாகிறது.மேலும் ரெயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் அளித்தல், முன்பதிவு மற்றும் டிக்கெட் வழங்குவதில் உள்ள சிரமங்களை போக்குதல் ரெயில் நிலையங்களின் தரத்தை உயர்த்துதல் போன்றவை பற்றியும் பட்ஜெட்டில் இடம் பெறுகிறது.

No comments:

Post a Comment