பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைப்பு; டீசல் விலை ரூ.1.45 உயர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 29, 2016

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைப்பு; டீசல் விலை ரூ.1.45 உயர்வு

மத்திய பட்ஜெட் இன்று தாக்கலான நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.47 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் வெளியிட்ட செய்தி ஒன்றில், சர்வதேச சந்தையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்பட்ட மாற்றம், இந்திய ரூபாய்- அமெரிக்க டாலர் பரிமாற்றத்தில் ஏற்பட்ட மாற்றம், இறக்கம் காரணமாக, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அங்கு ஏற்படும் மாற்றம், எதிர்காலத்தில் பிரதிபலிக்கும் என கூறியுள்ளது.

கடந்த பிப்ரவரி 17ம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 பைசா குறைக்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 28 பைசா அதிகரிக்கப்பட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டது. பொதுத்துறை நிறுவனங்களான ஐ.ஓ.சி., பாரத் பெட்ரோலியம் கார்பரேசன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் ஆகியவை ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16ம் தேதிகளில், சர்வதேச சந்தையின் விலை, ரூபாய் - அமெரிக்க டாலர் பரிமாற்றத்தில் ஏற்படும் மாற்றத்தை வைத்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment