அரசு இ-சேவை மையங்களுக்கான முகநூல் பக்கம் உருவாக்கம்: தமிழக அரசு தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, February 23, 2016

அரசு இ-சேவை மையங்களுக்கான முகநூல் பக்கம் உருவாக்கம்: தமிழக அரசு தகவல்

அரசு இ-சேவை மையங்களுக்கான முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு இ-சேவை மையங்கள் குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வெளியிட்ட செய்திக்

குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தமிழகம் முழுவதும் அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.

தலைமைச்செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை

மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்கள், அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் அனைத்து கோட்ட அலுவலகங்கள்,

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நான்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 470 இடங்களில் அரசு

இ-சேவை மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அமைத்து நிர்வகித்து வருகிறது.

அரசுப் பணி தேர்விற்கு விண்ணப்பிப்பது உள்பட 54 சேவைகள் இந்த மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு இ-சேவை

மையம் தொடர்பான தகவல்களை செல்பேசியில் தெரிந்துகொள்வதற்கு டி.ஏ.சி.டி.வி. என்ற செயலியை (ஆப்) கூகுள் ப்ளே

ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுவரை 7ஆயிரத்து 832 நபர்கள் இந்தச் செயலியினை பதிவிறக்கம் செய்துள்ளனர். இச்செயலியை பயன்படுத்தி, தமிழ்நாடு அரசு

கேபிள் டி.வி. நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் அரசு இ-சேவை மையங்களின் முகவரி, வரைபடம், மையத்திற்கு செல்லும் வழி,

வழங்கப்படுகின்ற சேவைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இ-சேவை மையங்களுக்கென்று பிரத்தியேகமாக,

‘டி.ஏ.சி.டி.வி.’ என்ற முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முகநூல் பக்கத்தில் அரசு இ-சேவை மையங்கள் தொடர்பான

அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த முகநூல் பக்கத்தினை நல்லமுறையில் பயன்படுத்தி, அரசு இ-சேவை மையங்களின் முகவரி,

வழங்கப்படும் சேவைகள் மற்றும் அதற்குண்டான கட்டணம் ஆகியன குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

தாங்கள் தெரிவிக்கின்ற ஆலோசனைகள் மற்றும் குறைகள் மீது இந்நிறுவனம் தக்க நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், அது

தொடர்பான விவரங்களையும் இந்த முகநூல் பக்கத்தில் பதிவு செய்யும். எனவே, தமிழ்நாடு அரசின் கேபிள் டி.வி. நிறுவனத்தின்

இ-சேவை மையங்கள் குறித்த முகநூல் பக்கத்தினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment